தகராறு செய்த கணவர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மனைவி கைது

Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுக்கோட்டை : அரிமளம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சேப்பிலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, துரை(50) இவரது மனைவி வணக்கம்மேரி(48). அடிக்கடி துரை மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று
தகராறு செய்த கணவர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மனைவி கைது

புதுக்கோட்டை : அரிமளம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சேப்பிலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, துரை(50) இவரது மனைவி வணக்கம்மேரி(48). அடிக்கடி துரை மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று வழக்கம்போல் துரை மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த துரையின் மனைவி வணக்கம்மேரி வீட்டில் இருந்த சுடு தண்ணீரை எடுத்து துரை மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.இதனால், சூடு தாங்க முடியாமல் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்த துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பலத்த காயத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, துரை அரிமளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, வணக்கம்மேரியை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-ஜூலை-202204:28:56 IST Report Abuse
வெகுளி ஒரு பக்கத்தில் சுடுதண்ணி ஊத்தினால் மறுபக்கத்தையும் காட்டுவார்ன்னு மேரி நினைச்சிருப்பாங்க.... அவரு சூடு தாங்காமல் போலீஸ் கிட்ட போயிட்டாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X