சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: கேரள அமைச்சர் ஷாஜி செரியன் ராஜினாமா

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவனந்தபுரம் : சர்ச்சை பேச்சில் சிக்கிய கேரளஅமைச்சர் ஷாஜ செரின் இன்று (ஜூலை 06) ராஜினாமா செய்தார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக ஷாஜி செரியன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், : நம் அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டு, இந்தியர்கள் பெயரில் வெளியிடப்பட்டது. அது மக்களை
 சர்ச்சை பேச்சு , கேரள அமைச்சர் ஷாஜி, செரியன் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம் : சர்ச்சை பேச்சில் சிக்கிய கேரளஅமைச்சர் ஷாஜ செரின் இன்று (ஜூலை 06) ராஜினாமா செய்தார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில்
மாநில மீன்வளத் துறை அமைச்சராக ஷாஜி செரியன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், : நம் அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டு, இந்தியர்கள் பெயரில் வெளியிடப்பட்டது. அது மக்களை சுரண்டுவதை மன்னிக்கிறது; கொள்ளையடிக்க ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை06) தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில், ராஜினாமா முடிவு எனது தனிப்பட்ட து. அரசிலமைப்பு சட்டத்தை நான் எப்போதும் அவமதித்தது இல்லை. சபையில் எனது உரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் திரித்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூலை-202220:18:03 IST Report Abuse
அப்புசாமி சட்டம் என்பது ஆள்பவர்களால் ஆள்பவர்களுக்கு எழுதப்பட்டது. அரசியல் சாசனமாகட்டும், சிவில் சட்டமாகட்டும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஜூலை-202220:07:36 IST Report Abuse
ஆரூர் ரங் அரசியல் சட்டத்தை (முன்வரைவை ) தயாரித்து அளித்தவர் கர்நாடகத்தைச் சேர்ந்த நர்ஸிங் ராவ் எனும் அறிஞர். அவற்றில் தேவையான மாற்றங்களை புகுத்தி அங்கீகரித்தது டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இருந்த குழு. இதனை ஆங்கிலேயர்கள் உருவாக்கியது என்று இவரை யார் கூற வைத்தது. வாடிகனா?
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
06-ஜூலை-202219:45:17 IST Report Abuse
T.Senthilsigamani இதே கருத்தை பிஜேபி அமைச்சர் ஒருவர் சொல்லியிருந்தால் இங்குள்ள சிறுத்தை குட்டிகள் பொங்கியெழுந்திருப்பார்கள் .அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அம்பேத்காரை பிஜேபியினர் அவமதித்து விட்டனர் என கண்டன ஊர்வலங்களும் ,போராட்டங்களும் நடத்தியிருப்பார்கள் ஆனால் சொன்னது சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் அமைச்சர் என்பதால் கள்ள மௌனம் தான் சாதிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X