சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: கேரள அமைச்சர் ஷாஜி செரியன் ராஜினாமா | Dinamalar

சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு: கேரள அமைச்சர் ஷாஜி செரியன் ராஜினாமா

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (5) | |
திருவனந்தபுரம் : சர்ச்சை பேச்சில் சிக்கிய கேரளஅமைச்சர் ஷாஜ செரின் இன்று (ஜூலை 06) ராஜினாமா செய்தார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக ஷாஜி செரியன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், : நம் அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டு, இந்தியர்கள் பெயரில் வெளியிடப்பட்டது. அது மக்களை
 சர்ச்சை பேச்சு , கேரள அமைச்சர் ஷாஜி, செரியன் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவனந்தபுரம் : சர்ச்சை பேச்சில் சிக்கிய கேரளஅமைச்சர் ஷாஜ செரின் இன்று (ஜூலை 06) ராஜினாமா செய்தார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில்
மாநில மீன்வளத் துறை அமைச்சராக ஷாஜி செரியன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், : நம் அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டு, இந்தியர்கள் பெயரில் வெளியிடப்பட்டது. அது மக்களை சுரண்டுவதை மன்னிக்கிறது; கொள்ளையடிக்க ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


அவருடைய இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை06) தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கூறுகையில், ராஜினாமா முடிவு எனது தனிப்பட்ட து. அரசிலமைப்பு சட்டத்தை நான் எப்போதும் அவமதித்தது இல்லை. சபையில் எனது உரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் திரித்து வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X