நடத்தையில் சந்தேகம் : காதலியை தாக்கிய காதலன் கைது

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
வேலுார் :வேலுார் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதலியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.வேலுார் மாவட்டம், திருவலம் அருகே குப்பத்தா மோட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 20. இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆர்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு
நடத்தையில், சந்தேகம் ,காதலியை,தாக்கிய,காதலன்,கைது

வேலுார் :வேலுார் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் காதலியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், திருவலம் அருகே குப்பத்தா மோட்டூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 20. இவர் வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் ஆர்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி வேலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வருகிறார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கல்லுாரிக்கு செல்வதற்காக திருவலம் பஸ் ஸ்டாண்டில் மாணவி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் மாணவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். திடிரென மாணவியின் கழுத்தில் சதீஷ்குமார் குத்தினார். படுகாயமடைந்த மாணவியை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தப்பியோடிய சதீஷ்குமாரை மக்கள் பிடித்து திருவலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மாணவியை வேறு ஒரு கல்லுாரி மாணவர் அடிக்கடி சந்தித்து பேசி வந்தார். மாணவியின் நடத்தையில் சந்தேமகடைந்து கத்தியால் குத்தியது தெரியவந்தது. திருவலம் போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X