வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மானுக்கு சண்டிகாரில் நாளை (ஜூலை 07) எளிய முறையில் திருமணம் நடக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. முதல்வராக பகவந்த் சிங் மான் ,48 பதவியேற்றார். இவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டம் சடோஜ் கிராமத்தில் 1973 அக். 17ல் பிறந்தார்.
இந்நிலையில் இவருக்கும், குருக் ஷேத்ராவைச் சேர்ந்த குருப்ரீத் கவுர் என்ற 32 வயது டாக்டருக்கும் நாளை (ஜூலை 07) சண்டிகரில் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
![]()
|
மிகவும் எளியை முறையில் இருதரப்பு பெற்றோர் , நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். இதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, உள்ளிட்ட ஆம் ஆத்மி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பகவந்த்சிங் மான் ஏற்கனவே திருமணம் செய்து முதல் மனைவி மூலம் ஒரு மகன், மகள் உள்ளதாகவும், 6 வருடங்களுக்கு முன் விவகாரத்து பெற்று அவர்கள் அமெரிக்காவில் வசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.