கர்நாடகாவில் மழை குறைவு காவிரி நீர்வரத்து பாதிப்பு

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
சென்னை:கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டுதோறும் ஜூனில் நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்குகிறது. அதன்படி, ஜூனில் 9 டி.எம்.சி.,

சென்னை:கர்நாடகாவில், தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டுதோறும் ஜூனில் நீர் வழங்கும் தவணைக் காலம் துவங்குகிறது. அதன்படி, ஜூனில் 9 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். அங்கு, அதிக மழை பெய்ததால், ஒதுக்கீட்டை காட்டிலும், 16.4 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கிடைத்தது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. பாசனத்திற்கு அதிக நீர் தேவை. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கர்நாடகா முறைப்படி நீரை திறந்தால், தட்டுப்பாடின்றி பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.நடப்பு மாதமான ஜூலையில் 31.24 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும்.

இதன்படி, 3ம் தேதி வரை 3.02 டி.எம்.சி., நீரை வழங்கி இருக்க வேண்டும்; 0.80 டி.எம்.சி., நீர் தான் வந்துள்ளது. கர்நாடகாவில் மழை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கர்நாடகாவிடம் முறைப்படி நீரை பெற வேண்டிய நெருக்கடிக்கு, தமிழக நீர்வளத்துறையினர் ஆளாகியுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X