உ.பி., மேலவையில் காங்கிரஸ் 'ஜீரோ'

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
லக்னோ :உத்தர பிரதேச சட்ட மேலவையில், 135 ஆண்டுகளில் முதல் முறையாக, காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, 1887 ஜனவரி 5ல் சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. முதல் கூட்டம், அந்தாண்டு ஜனவரி 8ல் நடந்தது.சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்து வந்தனர்.தற்போது சட்ட
உ.பி., மேலவை,காங்கிரஸ் ,ஜீரோ

லக்னோ :உத்தர பிரதேச சட்ட மேலவையில், 135 ஆண்டுகளில் முதல் முறையாக, காங்கிரஸ் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது.

இங்கு, 1887 ஜனவரி 5ல் சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. முதல் கூட்டம், அந்தாண்டு ஜனவரி 8ல் நடந்தது.சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருந்து வந்தனர்.தற்போது சட்ட மேலவையில் உள்ள ஒரே காங்கிரஸ் உறுப்பினரான தீபக் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூலை 06) முடிவுக்கு வந்தது.


latest tamil news


இதையடுத்து கடந்த 135 ஆண்டுகளில், தற்போது முதல் முறையாக உத்தர பிரதேச சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் யாரும் இல்லாத நிலை உருவாகிஉள்ளது.

கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஏழு இடங்களில் வென்றது. கடந்த மார்ச்சில் நடந்த தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பிடித்தது. அந்தக் கட்சிக்கு, 2.33 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202211:26:46 IST Report Abuse
N Sasikumar Yadhav கான்கிராஸ் முக்த் பாரத். முதலில் உத்தரபிரதேசத்தில் முக்த் கான்கிராஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X