ரூ.60 ஆயிரம் இழப்பீடு 'சிம் கார்டு ஏஜன்சி'க்கு உத்தரவு 

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
கடலுார்:சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, தனியார் 'சிம் கார்டு' விற்பனை ஏஜன்சி இழப்பீடாக, 60 ஆயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூரணன், 44. இவர், தனியார் நிறுவன சிம் கார்டு பயன்படுத்தி வந்தார். சிம்கார்டு சரியாக இயங்காததால் சென்னையில் உள்ள சிம் கார்டு விற்பனை

கடலுார்:சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, தனியார் 'சிம் கார்டு' விற்பனை ஏஜன்சி இழப்பீடாக, 60 ஆயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூரணன், 44. இவர், தனியார் நிறுவன சிம் கார்டு பயன்படுத்தி வந்தார். சிம்கார்டு சரியாக இயங்காததால் சென்னையில் உள்ள சிம் கார்டு விற்பனை ஏஜன்சியிடம் புகார் தெரிவித்தார்.ஆனால், ஏஜன்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், அவர் பயன்படுத்தி வந்த மொபைல் எண் வேறொரு வாடிக்கையாளருக்கு வழங்கப் பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பூரணன், இழப்பீடு கோரி கடலுார் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 2016ம் ஆண்டு புகார் அளித்தார்.ஆணையத் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.இதில், பூரணனுக்கு 60 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, ஏஜன்சி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X