செஸ் போட்டியில் சாதிக்க சிறப்பு பயிற்சி; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
உடுமலை: உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செஸ் போட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாமல்லபுரத்தில், 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும், 28ல் துவங்குகிறது.இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல


உடுமலை: உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செஸ் போட்டிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை மாமல்லபுரத்தில், 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும், 28ல் துவங்குகிறது.இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவியருக்கு செஸ் போட்டிகள், வரும் 13 முதல் 15ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இதற்காக பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது.அவ்வகையில் தற்போது உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் கீழ் மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் செஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதில் செஸ் போட்டிக்கான விதிகள், நுணுக்கங்கள், போட்டியில் பயன்படுத்தப்படும் வாக்கிய விபரங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, 6 முதல் 8ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு என மூன்று பிரிவுகளின் கீழ் பள்ளி அளவில் போட்டி நடத்தி தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், வட்டார, மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம் மற்றும் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வர். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X