கணவன் கொலை மனைவி கைது

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
சென்னை:-கணவனை கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, வளசரவாக்கம் கைக்கான் குப்பம், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் குமார், 50; இவரது மனைவி விஜயா, 36. குமார் தினமும் மது அருந்தி வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் 3ம் தேதி வீட்டில், குமார் திடீரென மயக்கமடைந்து இறந்து விட்டதாக, அவரது மனைவி விஜயா, போலீசில் புகார் அளித்தார். வளசரவாக்கம் போலீசார் குமாரின் உடலை

சென்னை:-கணவனை கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வளசரவாக்கம் கைக்கான் குப்பம், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் குமார், 50; இவரது மனைவி விஜயா, 36. குமார் தினமும் மது அருந்தி வந்து, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் 3ம் தேதி வீட்டில், குமார் திடீரென மயக்கமடைந்து இறந்து விட்டதாக, அவரது மனைவி விஜயா, போலீசில் புகார் அளித்தார்.

வளசரவாக்கம் போலீசார் குமாரின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குமாரின் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.இதையடுத்து, விஜயாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, குமார், மது அருந்தி தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும், அவரை தள்ளிவிட்டதில் இறந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X