பலத்த காற்றில் பயமுறுத்தும் மரங்கள்

Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலை நகரில், ஆங்காங்கே, பட்டுபோன மரங்கள் உள்ளன. குறிப்பாக, ரோட்டோரத்தில், கீழே விழும் நிலையில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. தற்போது, பலத்த காற்று, மழையின் தாக்கம் இருப்பதால், இம்மரங்கள் கீழே விழுந்து, பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மின் இணைப்பு கம்பிகள் மீது சாய்ந்தால் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.அவ்வரிசையில், உடுமலை கால்நடை மருத்துவமனை


உடுமலை : உடுமலை நகரில், ஆங்காங்கே, பட்டுபோன மரங்கள் உள்ளன. குறிப்பாக, ரோட்டோரத்தில், கீழே விழும் நிலையில் இந்த மரங்கள் காணப்படுகின்றன. தற்போது, பலத்த காற்று, மழையின் தாக்கம் இருப்பதால், இம்மரங்கள் கீழே விழுந்து, பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மின் இணைப்பு கம்பிகள் மீது சாய்ந்தால் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.



அவ்வரிசையில், உடுமலை கால்நடை மருத்துவமனை வளாகத்திற்குள் பட்டுப்போய் நிற்கும் மரம், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மக்கள் கூறியதாவது: நகரின் ரோட்டை ஒட்டியே பட்டுப் போன மரங்கள் உள்ளன. இதுபோன்ற வழித்தடங்களில், தினமும், அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.



பல்வேறு தேவைகளுக்கு மக்களும் வந்து செல்கின்றனர்.மக்கள் நடமாட்டம் உள்ள போது, இந்த மரம் சாய்ந்து விழுந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். முன்னெச்சரிக்கையாக அந்த மரத்தை வெட்டி அகற்ற, துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X