'பேடிஎம் மணி' மூலம் மியூட்சுவல் பண்ட் முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு!

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
'பேடிஎம் மணி' செயலி, டைரக்ட் மியூட்சுவல் பண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்கவும், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கவும், பி.எஸ்.இ., ஸ்டார் உடன் இணைந்துள்ளது. எனவே பேடிஎம் மணி மூலம் மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் ஜூலை 25க்குள் கூடுதல் கே.ஒய்.சி., விவரங்களை வழங்க வேண்டும். இல்லையெனில் அவர்களது எஸ்.ஐ.பி., திட்டங்கள் நிறுத்தப்படும். இது தொடர்பாக பேடிஎம் மணி
Paytm_money, Mutual_Fund, SIP, மியூட்சுவல்_பண்ட், Direct_MF,

'பேடிஎம் மணி' செயலி, டைரக்ட் மியூட்சுவல் பண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்கவும், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கவும், பி.எஸ்.இ., ஸ்டார் உடன் இணைந்துள்ளது. எனவே பேடிஎம் மணி மூலம் மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் ஜூலை 25க்குள் கூடுதல் கே.ஒய்.சி., விவரங்களை வழங்க வேண்டும். இல்லையெனில் அவர்களது எஸ்.ஐ.பி., திட்டங்கள் நிறுத்தப்படும்.

இது தொடர்பாக பேடிஎம் மணி முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளதாவது: செபி விதிமுறைகளின்படி 'பிஎஸ்இ., ஸ்டார்' தளத்தில் உள்ள முதலீட்டாளர்கள் மாதாந்திர முதலீடுகளை தொடர டீமேட் கணக்கைத் திறந்து புரோக்கிங் நிறுவன வாடிக்கையாளராக பதிய வேண்டும். நமது தளத்தில் தரப்பட்ட ஆரம்பக்கட்ட கே.ஒய்.சி., தகவலை தவிர மேலும் சில விவரங்கள் தேவைப்படும். உங்கள் கணக்கை மேம்படுத்த அத்தகவலை பங்குச்சந்தையில் தெரிவிக்க வேண்டும்.


latest tamil news



இந்த முழு செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளைத்தாளில் கையொப்பமிட்டு பேடிஎம் மணி செயலி மூலம் அதனை தெளிவான புகைப்படமாக எடுத்து பதிவேற்ற வேண்டும். டீமேட் கணக்கு தொடங்குவதும் முற்றிலும் இலவசம். ஜூலை 25க்குள் தேவையான தகவல்களை வழங்காவிடில் அதன் பின்னர் மாதாந்திர முதலீடு நிறுத்தப்படும். இவ்வாறு மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X