முதல்வர் திறந்த மீன் மார்க்கெட்; 'பார்' ஆக மாறிய அலங்கோலம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான மீன் மார்க்கெட் வளாகம், முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாடின்றிக் கிடக்கிறது. குப்பையும், காலி மது பாட்டில்களும் வளாகத்தைச் சுற்றிக் காணப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில், மீன்
முதல்வர் திறந்த மீன் மார்க்கெட்; 'பார்' ஆக மாறிய அலங்கோலம்


திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான மீன் மார்க்கெட் வளாகம், முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாடின்றிக் கிடக்கிறது. குப்பையும், காலி மது பாட்டில்களும் வளாகத்தைச் சுற்றிக் காணப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில், மீன் மார்க்கெட் வளாகம், 2.20 கோடி ரூபாய் செலவில் 28 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நிர்வாக அனுமதி, 2019ம் ஆண்டு தொழில் நுட்ப அனுமதி பெற்று பணி துவங்கியது.இங்கு இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆண் மற்றும் பெண்களுக்கு கழிப்பிடம், மீன்கள் சுத்தம் செய்யும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை கடந்த மே மாதம், காணொலி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்காலிக வளாகத்தில் உள்ள மீன் கடைகள், இங்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏலமும் நிறைவு பெற்றது.


குண்டும், குழியுமாக...
இந்த வளாகம் செல்லும் வழி குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளது. இங்கு 28 கடைகள் செயல்படும் நிலையில், வளாகத்தைச் சுற்றிலும் மின் விளக்குகள், கழிப்பிடம் மற்றும் மீன் சுத்தம் செய்யும் இடத்துக்கு தண்ணீர் வழங்க மோட்டார் ஆகியன பொருத்த வேண்டும்.ஆனால் முதல்வர் திறந்து வைத்து 3 மாதமாகியும் இந்த வளாகம் இன்னும் முழுமையாக திறந்து பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. தற்காலிக வளாகத்தில் இட நெருக்கடி மற்றும் தேங்கி நிற்கும் கழிவு நீர் இடையே கடைகள் செயல்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

தொடரும் அட்டகாசம்
மேலும் வளாகம் திறக்கப்படாமல் உள்ளதால் 'குடி'மகன்கள் அங்கு மது அருந்தி காலி மது பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர். குப்பை கழிவுகளும் தேங்கி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அவற்றை சுத்தம் செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வேண்டும்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மின் இணைப்பு பெறும் வகையில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. கூடுதல் டிபாசிட் தொகை செலுத்த வேண்டும் என மின் வாரியம் தெரிவித்தது. அதற்கான தொகை நேற்று செலுத்தப்பட்டது. விரைவில் மின் இணைப்பு வழங்கி கடைகள் திறக்கப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X