கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' துறைமுகத்தில் பாதிப்பு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
சென்னை:சென்னையில் துறைமுக கன்டெய்னர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குப் பெட்டகங்கள் தேங்கி உள்ளன.'கன்டெய்னர் லாரிகளுக்கான வாடகையை, கடந்த 2014ல் இருந்து, ஆண்டுக்கு 10 சதவீதம் என, 80 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.காலி லாரிகளை நிறுத்த, 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்' என்பதை
கன்டெய்னர் லாரிகள் 'ஸ்டிரைக்' துறைமுகத்தில் பாதிப்பு

சென்னை:சென்னையில் துறைமுக கன்டெய்னர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குப் பெட்டகங்கள் தேங்கி உள்ளன.
'கன்டெய்னர் லாரிகளுக்கான வாடகையை, கடந்த 2014ல் இருந்து, ஆண்டுக்கு 10 சதவீதம் என, 80 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.காலி லாரிகளை நிறுத்த, 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தி, 4ம் தேதி முதல் துறைமுக கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், மஞ்சம்பாக்கம், மாதவரும், மணலிபுதுார், திருவொற்றியூர், எண்ணுார், எக்ஸ்பிரஸ் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் பகுதிகளில், கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப் பட்டு உள்ளன.இதனால், சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகங்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு பெட்டகங்கள் தேக்கமடைந்துள்ளன. நேற்று மதியம் சென்னை துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள், கன்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தினர். தொடர்ந்து பேச்சு நடத்தப்படும் என, தெரிகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X