எங்கெங்கும் குப்பை மயம்!

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
அவிநாசி : நாளொன்றுக்கு மாநகராட்சிகளில் ஒருவருக்கு 500 - 700 கிராம், நகராட்சிகளில் 500 கிராம், பேரூராட்சிகளில் 350 கிராம், ஊராட்சிகளில் 250 கிராம் வரை என குப்பைகள் சேர்கின்றன.இவை அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தின் கீழ்,சுகாதார ஊழியர்கள் மூலமாக பெறப்பட்டு, மக்கும் குப்பைகளை திடக்கழிவு உரமாக மாற்றவும், மக்காதவைகளை


அவிநாசி : நாளொன்றுக்கு மாநகராட்சிகளில் ஒருவருக்கு 500 - 700 கிராம், நகராட்சிகளில் 500 கிராம், பேரூராட்சிகளில் 350 கிராம், ஊராட்சிகளில் 250 கிராம் வரை என குப்பைகள் சேர்கின்றன.இவை அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தின் கீழ்,சுகாதார ஊழியர்கள் மூலமாக பெறப்பட்டு, மக்கும் குப்பைகளை திடக்கழிவு உரமாக மாற்றவும், மக்காதவைகளை தனியாக சேகரித்து தரம் பிரித்தும் வைப்பார்கள்.

இந்நிலையில், அவிநாசி முதல் சேவூர் வரை உள்ள கிராம பஞ்சாயத்து எல்லைகளில் உள்ள சாலையோரங்களில், மலை போல ஆங்கங்கே குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தம், வேட்டுவபளையம்,பந்தம் பாளையம் உள்ளிட்ட இடங்களில், சாலைகளின் ஓரமாகவே ஒரு குப்பை கிடங்கை உருவாக்கி உள்ளார்கள்.மேலும், விரிவடைந்துள்ள நகர எல்லைகளால், பனியன் நிறுவனங்கள்,சிறு,குறு தொழிலகங்கள், வீட்டுமனைகள் என அவிநாசி முதல் சேவூர் வரையிலும், பரந்து விரிந்து மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள காரணத்தினாலும் எங்கெங்கு காணினும் குப்பைகளை வீசி சென்றுள்ளனர்.

இந்நிலையில், தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வேட்டுவபளையம் ஊராட்சி பெயர் பலகையே குப்பை மலைக்கு நடுவே நம்மை வரவேற்கிறது.துாய்மையான சுகாதாரம் தான் வளமைக்கும், வளர்ச்சிக்கும் மற்றும் உணவு சுழற்சிக்கான விவசாயத்திற்கும் அடித்தளமாக விளங்குகிறது என ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X