இலவச ஆடுகள் பலி; பயனாளிகள் அதிர்ச்சி| Dinamalar

இலவச ஆடுகள் பலி; பயனாளிகள் அதிர்ச்சி

Added : ஜூலை 07, 2022 | |
அவிநாசி:கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக வழங்கப்பட்ட ஆடுகள் இறந்ததால், பயனாளிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். \கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட, திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில், தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆடுகள் வழங்கப்படுகிறது.மொத்த வியாபாரிகள் வாயிலாக, பயனாளிகள் ஆடுகள் வாங்குகின்றனர். கடந்த இரு
இலவச ஆடுகள் பலி; பயனாளிகள் அதிர்ச்சி

அவிநாசி:கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக வழங்கப்பட்ட ஆடுகள் இறந்ததால், பயனாளிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். \
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், அவிநாசி, பல்லடம், திருப்பூர் உட்பட, திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட 5 வட்டாரத்தில், தலா 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆடுகள் வழங்கப்படுகிறது.மொத்த வியாபாரிகள் வாயிலாக, பயனாளிகள் ஆடுகள் வாங்குகின்றனர். கடந்த இரு நாட்களாக, சில இடங்களில் ஆடுகள் அடுத்தடுத்து பலியாகின்றன.
அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் கிராமத்தில், மூன்று ஆடுகள் பலியாகின. பயனாளிகள் கூறுகையில், 'அரசால் இலவசமாக வழங்கப்பட்ட ஆடுகள், சரிவர தீவனம் உட்கொள்ளாமல், சோர்ந்து போய் இருந்தன. சில ஆடுகள் இறந்தும் போயின; சிலவற்றின் உடல்நிலை மோசமாக உள்ளது. இறந்த ஆடுகளுக்கு பதிலாக, வேறு ஆடுகள் வழங்க ஏற்பாடு செய்வதாக, கால்நடை பராமரிப்பு துறையினர் உறுதி அளித்துள்ளனர்' என்றனர்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஆடுகள் இறந்திருப்பதாக, பயனாளிகள் தரப்பில் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது.இப்பிரச்னைக்கு, உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை, கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால், எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால், இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X