இருக்கு, ஆனா... இல்லை! புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும், என, வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், எப்போதும் போன்று புழக்கத்தில் உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி,
இருக்கு, ஆனா... இல்லை!  புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு


வால்பாறை : ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும், என, வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், எப்போதும் போன்று புழக்கத்தில் உள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய எட்டு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் அரிய வகை வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும் நிறைந்து காணப்படுகின்றன.

இதனை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கடந்த, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரசு தடை விதித்துள்ளது. ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆழியாறு, அட்டகட்டி சோதனைச்சாவடிகளில், வாகனங்களில் வருவோரை முழுமையாக சோதனைக்கு உட்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, துணிப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் கட்டாயப்படுத்துவதில்லை.

வால்பாறையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் தடை உத்தரவு பின்பற்றப்படாமல் காற்றில் பறக்கிறது.வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, அதை வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர். பிளாஸ்டிக் கவர்களை உட்கொள்ளும் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.குறிப்பாக, உணவு பொருட்களோடு பிளாஸ்டிக் கவர்களை வனப்பகுதியில் வீசி செல்வதால், உணவு பொருட்களின் வாசனையால், பிளாஸ்டிக் கவருடன் சேர்த்து உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த சில மாதங்களாக வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். ஆழியாறு, அட்டகட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல், வால்பாறைக்கு சுற்றுலா வருவோர் மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்தி, 'செல்பி' எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இதை மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.பிளாஸ்டிக் பயன்படுத்த தடை இருக்கு; வனத்தில் பயன்படுத்தினால் கடும் சட்டமும் பாயும் என, எச்சரிக்கின்றனர்.

சுற்றுலா பயணியருக்கும் இயற்கை வளத்தை பாதுகாப்பதில் விழிப்புணர்வு இல்லை; அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை.பிளாஸ்டிக் தடை உத்தரவுகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. செயல்பாட்டில் இல்லாததால், வால்பாறையில் பிளாஸ்டிக் புழக்கம் அமோகமாக உள்ளது. இதை மறுக்க முடியாது; இந்த நிலை மாற வேண்டும்.


துணிப்பை கொடுக்கலாமே!

வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் அனைவரும், ஆழியாறு செக்போஸ்ட் வழியாக தான் பயணிக்கின்றனர். சுற்றுலா வாகனங்களை வனத்துறையினர் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.வால்பாறையில் இருந்து ஆழியாறு செல்லும் போது, அட்டகட்டியில் செக்போஸ்ட்டில் சோதனை செய்து, பிளாஸ்டிக் பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்க வேண்டும். அவர்களுக்கு, பிளாஸ்டிக் மாற்றாக, துணிப்பை வழங்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில், நகராட்சி, வனத்துறையினர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முழு பலன் கிடைக்கும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X