இது உங்கள் இடம்: ராசாவை கொஞ்சம் ஓரங்கட்டுங்க!

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:ஏ.சபீதா பானு, பண்ருட்டி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி.,யான ஆ.ராசா, 'ஈ.வெ.ரா.,வின் தனி தமிழகம்கோரிக்கையை விடுத்து, மத்தியில் கூட்டாட்சி என்று கேட்டு வருகிறோம். மீண்டும்
A Raja, DMK, Nilgiris, ராசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


ஏ.சபீதா பானு, பண்ருட்டி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய, நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி.,யான ஆ.ராசா, 'ஈ.வெ.ரா.,வின் தனி தமிழகம்கோரிக்கையை விடுத்து, மத்தியில் கூட்டாட்சி என்று கேட்டு வருகிறோம். மீண்டும் எங்களை ஈ.வெ.ரா., வழியில் செல்ல வைத்து விடாதீர்கள்' என, மத்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

ரூ.1.70 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாருக்கு ஆளான ராசாவுக்கு, மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும்மிரட்டல் விடுக்கும் வகையில் பேச என்ன தகுதி இருக்கிறது? ராசா அவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்... மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று கேட்டு வருவதும், சொல்லி வருவதும் உங்களின் தி.மு.க., மட்டுமே; தமிழக மக்கள் யாரும் அப்படி கேட்டு அழுது வடியவில்லை.

நீங்களும், உங்களின் கட்சியினரும் கூட்டாட்சி கேட்பதெல்லாம் மாநிலத்தில்போதாதென்று, மத்திய அரசிலும் எந்தெந்த வகையில் எல்லாம் கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவே அன்றி, மக்கள் நலனுக்காகவே அல்ல. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் நீங்களும், உங்கள் கட்சியினரும் இடம் பெற்றிருந்த போது தானே, நாளுக்கு ஒரு லஞ்சப் புகாரும், ஊழல் புகாரும் அம்பலமாகிக் கொண்டிருந்தன. இப்போது, பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற நல்லாட்சி நடந்து வருவது, உங்களுக்கு பிடிக்கவில்லை; அதனால், கொதிக்கிறீர்கள்; குதிக்கிறீர்கள்.


latest tamil newsசரி போகட்டும் என்று மக்களாகிய நாங்கள், உங்கள் கட்சியிடம் ஆட்சியை கொடுத்தால், தமிழர்கள் எல்லாரையும் தனி நாடு கேட்கும் பயங்கரவாதிகள் போல சித்தரிப்பதற்கு, உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஈ.வெ.ரா., தான் தனி தமிழகம் கோரிக்கையை முன்வைத்தார். அதன்பின், தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரையும், உங்களின் முன்னாள்தலைவர் கருணாநிதியும், மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து, அந்த கோரிக்கையை துாக்கி 'கடாசி' விட்டது உங்களுக்கு மறந்து போச்சா என்ன?

இதுவரை ஹிந்து மதத்தையும், அதன் பண்பாட்டையும் தான் விமர்சனம்செய்தீர்கள். இப்போது, பிரிவினைவாதம் பேசத் துவங்கி விட்டீர்கள். அன்னிய நாட்டினரிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்படும், கைக்கூலிகளைப்போல அல்லவா உங்களின் பேச்சு இருக்கிறது. ஈ.வெ.ரா., வழிக்கு போக நேரிடும் என்கிறீர்களே... நீங்கள் அவர் வழியில் போய்விட்டால், எல்லாரும் பயந்து விடுவரா என்ன? உங்களின் மிரட்டல் பேச்சுக்கு பயப்பட, மத்தியில் நடப்பது ஒன்றும் காங்கிரஸ் அரசல்ல... மோடி அரசு ராசாவே... மோடி அரசு.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே... சட்டசபை தேர்தல் நேரத்தில், அப்போது முதல்வராக இருந்த பழனிசாமியின் அம்மா பற்றி விமர்சித்து, தி.மு.க.,வை அசிங்கப்படுத்தியவர் இந்த ராசா. இப்போது பிரிவினைவாத பேச்சுக்களை பேசி, உங்களை சிக்கலில் மாட்ட வைத்து விடுவார்... ஜாக்கிரதை. இவரைப் போன்றோரை கொஞ்சம் ஓரங்கட்டி வையுங்கள். இல்லையெனில்,அடுத்த முறை நீங்கள் ஆட்சியை பிடிப்பது கஷ்டம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
07-ஜூலை-202220:14:12 IST Report Abuse
sampath, k The ruling parties are allowed to complete their tenure of period.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
07-ஜூலை-202220:11:11 IST Report Abuse
r.sundaram மத்தியில் கூட்டாட்சியில் இருந்தபோது இவ்ர்கள் என்ன செய்து கிழிச்சார்கள், அந்த ஒரு லட்சத்தி ஏழுபத்தி ஆறாயிரம் கொள்ளையை தவிர்த்து? மத்தியில் மொத்தக்கொள்ளை, மாநிலத்தில் சில்லரை கொள்ளை, இதற்குத்தான் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி. பி எம் கே மத்தியில் இரு அமைச்சர்களை கொண்ட போதுதான் தமிழகத்தில் ரயில்வேயில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜூலை-202219:32:49 IST Report Abuse
Ramesh Sargam இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பேர்வழிக்கு "ராஜா அவர்களே .. என்கிற மரியாதை வேண்டாம். "ராஜா என்கிற ஊழல் பேர்வழியே ... என்று குறிப்பிடுவது சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X