குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000: பயனாளிகளில் 34 லட்சம் பேர் தேர்வு?

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
சென்னை : தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு, பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் போன்ற சிறப்பு திட்டங்களை, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40
Rs 1000, women,Tamil Nadu govt, family heads, Tamil Nadu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு, பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம் போன்ற சிறப்பு திட்டங்களை, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்போர் என, 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே மாதம், 1,000 ரூபாய் உரிம தொகை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் வழங்க முடியாது.


latest tamil news


'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, 'ஆதார்' எண் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர் உதவி தொகை, விவசாய நிதியுதவி என, மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள்; ஏழ்மையில் உள்ளவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மத்திய அரசு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், பல்வேறு ஆய்வுக்கு பயனாளிகளை தேர்வு செய்கிறது. சிலிண்டர் மானியம் வழங்குவதற்காக, அந்த பயனாளிகளின் வங்கி கணக்கு விபரங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் ஏற்கனவே உள்ளன

.தமிழகத்தில், 34.51 லட்சம் இலவச சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். எனவே, குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 உரிம தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக, இலவச காஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின், உரிம தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
08-ஜூலை-202219:48:41 IST Report Abuse
Thanu Srinivasan Ethirkatchi
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202211:54:54 IST Report Abuse
raja திருட்டு திராவிட கொள்ளை கூட்ட குடும்ப கொத்தடிமைளுக்கு மட்டும் தான் போல.....
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
07-ஜூலை-202210:38:52 IST Report Abuse
Rajarajan இலவசம், இதுபோன்ற திட்டங்களை எல்லாம் வாங்கிகிட்டு, அப்புறம் விலைவாசி ஏத்திட்டாங்க, வரிகளை உயர்த்திட்டாங்கனு புலம்பவேண்டாம். சட்டியில் இருந்து தான் அகப்பையில் வரும். வரியிலிருந்து தான் சலுகைகள் வரும். இது மத்திய / மாநில அரசுகளுக்கும் சேர்த்து தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X