ஹிந்துக் கடவுள் குறித்து அவதூறு: எம்.பி.,யை கைது செய்ய வலியுறுத்தல்

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
கோல்கட்டா-ஹிந்துக் கடவுள் காளி குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவை கைது செய்ய, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலை என்ற ஆவணப் பட இயக்குனர், தான் இயக்கியுள்ள, 'காளி' என்று பெயரிட்ட ஆவணப் படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஹிந்துக் கடவுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneகோல்கட்டா-ஹிந்துக் கடவுள் காளி குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ராவை கைது செய்ய, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.latest tamil newsவட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலை என்ற ஆவணப் பட இயக்குனர், தான் இயக்கியுள்ள, 'காளி' என்று பெயரிட்ட ஆவணப் படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஹிந்துக் கடவுள் காளியை அவமதிக்கும் வகையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தப் படத்தை தடை செய்யவும், லீனா மணிமேகலையை கைது செய்யக் கோரியும், நம் நாட்டின் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுஉள்ளன.இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த எம்.பி., மஹுவா மொய்த்ரா, இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

'காளியை மாமிசம் உண்ணும், சாராயத்தை ஏற்கும் கடவுளாகவே பார்க்கிறேன்' என, அவர் குறிப்பிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு, ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இது குறித்து, மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாவது:ஹிந்துக் கடவுளை அவமதிப்பதை திரிணமுல் காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் கூறியது.


latest tamil newsஆனால், ஹிந்து மதக் கடவுள் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த தன் கட்சி எம்.பி., மீது எந்த நடவடிக்கையும் அந்தக் கட்சி எடுக்கவில்லை. அடுத்த, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடருவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிலையில், 'மஹுவா மொய்த்ரா கூறியது, அவரது சொந்த கருத்து. கட்சிக்கும், அவர் தெரிவித்த கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை' என, திரிணமுல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை படம் நீக்கம்

கனடாவைச் சேர்ந்த ஆகா கான் மியூசியம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணப் படங்கள் திரையிடப்படும். டொரன்டோ நகர பல்கலை சார்பில் இந்தாண்டு, 18 படங்கள் வெளியிடுவதாக இருந்தது. அதில், லீனா மணிமேகலையின் படமும் ஒன்று.ஹிந்துக் கடவுள் காளியை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவரது படத்துக்கு அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கனடா அரசிடமும் முறையிடப்பட்டது. இதையடுத்து, சர்ச்சை உருவானதுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆகா கான் மியூசியம், அந்தப் படத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.கனடாவைச் சேர்ந்த ஆகா கான் மியூசியம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணப் படங்கள் திரையிடப்படும். டொரன்டோ நகர பல்கலை சார்பில் இந்தாண்டு, 18 படங்கள் வெளியிடுவதாக இருந்தது. அதில், லீனா மணிமேகலையின் படமும் ஒன்று.ஹிந்துக் கடவுள் காளியை அவமதிக்கும் வகையில் இருப்பதால், அவரது படத்துக்கு அங்குள்ள ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கனடா அரசிடமும் முறையிடப்பட்டது. இதையடுத்து, சர்ச்சை உருவானதுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆகா கான் மியூசியம், அந்தப் படத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Doha,கத்தார்
07-ஜூலை-202210:40:58 IST Report Abuse
raja ஒன்னும் சொல்வதற்கு இல்லை..... ஒரு சார்பு நிலை எடுக்கிறார்கள் இந்தியாவில் நீதிமன்றங்களும் இந்த தவரையே செய்கின்றன சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையின் தலையை வெட்டினால்கூட இந்த நீதி மன்றங்கள் ஏற்றுக்கொள்கின்றனர் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்று என்ன தோன்றுகிறது தமிழ்நாட்டில் இன்னும் கொடுமை திராவிடம் பேசுபவன் எல்லாம் ஹிந்து கடவுளை இழிவுபடுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளான்..... இதற்க்கெல்லாம் காலம் பதில் சொல்லும்....
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
07-ஜூலை-202210:11:31 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்த நாட்டில் கடவுள் என்பது மனிதர்களை போன்றதே என கற்பிதம் செய்து கொண்டு அதற்க்கு பலர் படையல் இட்டு பக்தி மான்கள் என பாசாங்கு செய்கின்றனர்.அவர்களில் அசைவங்களையும் மது வகைகளையும் படைக்கின்றனர்.ஏனோர் பெருமையனாகினும் எம் இறை ஊனே சிறுமையில் உட்கலந்து அங்கு உளன் என்றும் முன்னை இவ்வுடம்பை இழுக்கென்றிருந்தேன் இவ்வுடம்புக்குள்ளே உறுபொருள் கண்டேன் என்றும் ஓதம் ஒளிக்கும் உலகை வளம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலின் அண்ணலை காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவார் என்றும் உளத்தினுள்ளே உல பல தீர்த்தங்கள் மெல்ல குடைந்து ஆதார் வினை கெட பள்ளமும் மேடும் பறந்து திரிவர் கள்ள மனமுடையோர் கல்வியிலோரே என்றும் திருமூலர் கூறியுள்ளதை வைத்து தெய்வம் எல்லோர் உள்ளேயும் உள்ளது அது அவர்கள் சைவமா அசைவமா என்றெல்லாம் பார்ப்பது இல்லை ஆன்ம ஞானம் இல்லாதவர்கள் தெய்வம் எங்கேயோ உள்ளது என மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் படையெடுத்துக்கொண்டு மக்களை துன்புறுத்துவதை கைவிட மாட்டார்கள் என்பதை அறியலாம்.குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார் குருட்டினை நீக்க குருவினை கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டமாடி குருடும் குருடும் குழி விழுமாறே என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க அரசியல் வாதிகளுக்கு பின்னால் அணிவகுத்து நின்று அவர்கள் வாக்கு வங்கிக்காக குருட்டு பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்கள் நரக குழியில் விழுவார்கள்.
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
07-ஜூலை-202208:00:07 IST Report Abuse
visu மத துவேஷ சட்டம் கொண்டு வரலாம் எந்த மத கடவுளை யார் நிந்தனை செய்தாலும் மரண தண்டனை பாகிஸ்தான் போல. எல்லா பிரச்சினையும் முடிந்து விடும் அவங்க அவங்க மதத்தை மட்டும் பாருங்க அடுத்த மதத்தை பற்றி ஏன் கவலை என்ன நம்ம Ev. ராமசாமி வகையறாக்களை வச்சு செய்து விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X