ஆதீனம் பொது நிறுவனம் அல்ல: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
மதுரை: 'ஆதீனம், பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு, ஆதீன மடத்திடம் கோர முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு: ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல; அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை; சொந்த நிதியில்
ஆதீனம், மடம், உயர்நீதிமன்றம்

மதுரை: 'ஆதீனம், பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு, ஆதீன மடத்திடம் கோர முடியாது' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் தாக்கல் செய்த மனு: ஆதீனம், மடம் என்பது பொது நிறுவனம் அல்ல; அரசின் நிதி உதவியில் இயங்கவில்லை; சொந்த நிதியில் செயல்படுகிறது. தமிழ் பக்தி இலக்கியம், ஆன்மிகப் பணியில் ஈடுபடுகிறது. தமிழக அறநிலையத்துறை சட்டத்தின் சில விதிகள் ஆதீனத்திற்கு பொருந்தும். எனினும், விதிகள்படி ஆதீன நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்ய முடியாது.



latest tamil news


ஆதீனம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மத நிறுவனங்கள் பற்றி சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விபரங்கள் கோரி தொந்தரவு செய்கின்றனர்.அந்த சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொது நிறுவனங்களிடம் மட்டுமே விபரங்கள் கோர முடியும். ஆதீனம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. மடங்கள், கோவில்கள் பொது நிறுவனங்கள் அல்ல. அரசின் நிதி உதவி பெறாத தன்னாட்சி பெற்ற மத நிறுவனங்களுக்கு, தகவல் உரிமைச் சட்டம் பொருந்தாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகள் ஆதீனம் அல்லது அதன் மத நிறுவனங்களுக்கு பொருந்தாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,''ஆதீனம், மடம் பொது நிறுவனம் அல்ல. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் வழங்குமாறு ஆதீன மடத்திடம் கோர முடியாது. மனு அனுமதிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
08-ஜூலை-202210:24:53 IST Report Abuse
konanki 18 பேரை திட்டமிட்டு ரிகர்சல் செய்து வெடி குண்டு வைத்து பீஸ் பீஸாக ஆக்கி படுகொலை செய்த கொலைகாரனை விடுதலை செய்த நீதிபதி அப்ப உங்க ஆளாக பாஸ்?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஜூலை-202210:18:25 IST Report Abuse
konanki டிவி சானல் களில், சாராயம் தயாரிக்கும் கம்பெனிகளில் சினிமா தயாரிப்பு/விநியோகம் கம்பெனிகளில், ரியல் எஸ்டேட் கம்பெனிகளில் வேலைப்பார்க்கும் மக்கள், அவர்கள் நலன்கள் கூட பொது நிறுவன சட்டங்களுக்கு உட்பட்டவை
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
08-ஜூலை-202210:09:22 IST Report Abuse
konanki ஸிரிவில்லிபுத்தூர் ரமேஷ் இன்னா இப்படி பொசுக்குன்னு சொல்டீங்க. ஆத்திரத்தை அவமரியாதை செஞ்சா சதுர செயலாளர் கலைமாமணி அண்ணா விருது எல்லாம் கிடைக்கும். நீங்க சொல்ற இடத்தில் இருந்து விவரங்கள் கேட்டா ஆட்டோல ஆள் வரும். தலை இருக்காது. நம்ப ஆளுங்க விவரமானவங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X