'பூஸ்டர் டோஸ்' கட்டாயம்: அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டம்

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : ''குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும், 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின்
Booster Dose, Corona Booster, Vaccine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும், 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, 'பூஸ்டர்' தவணை கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தொழில் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி, தமிழகம் முழுதும் 2021 ஜன., 16 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதில், 18 வயதுக்கு மேல், 94.61 சதவீதத்தினர் முதல் தவணையும், 85.39 சதவீதத்தினர், இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். அதன்படி 11.42 கோடி பேருக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணையும், 14.60 லட்சம் பேருக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.


latest tamil newsசுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அரசு மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. அதேநேரம், 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி, தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று 4ம் அலையை எதிர்கொள்ளும் வகையில், பெரு மற்றும் குறு தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களில் பணிபுரியும் 18 முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், தனியார் மருத்துவமனைகளில், பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் முழுமையான தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahehkumar11 - chennai,இந்தியா
07-ஜூலை-202213:58:38 IST Report Abuse
mahehkumar11 மூன்றாவது அலை அம்போ என்று மருந்து கம்பெனிகளையம் ஆஸ்பத்திரிகளையும் பணம் பண்ண முடியாமல் விட்டது. அதற்காக இந்த புது வழியா? எப்படியும் சம்பாதிப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
07-ஜூலை-202213:38:57 IST Report Abuse
Balaji மோத டோசே கட்டாயம்னு சொல்லக்கூடாதுன்னு கோர்ட் சொல்லுக்கு.. இதுல இவரு பூஸ்ட் கட்டாயம்னு சொல்லுதாரு.. வெளங்கிரும் நாடு.. இந்த ஊசியால் என்ன பயன் என்பதை விளக்க முடியுமா? அல்லது கல்லா கட்ட வழியா?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202207:01:21 IST Report Abuse
Mani . V மிஸ்டர் சுப்பிரமணியன் இதை பார்க்கவும். "பா.ஜ.,வுக்கு போட்டியாக தி.மு.க., பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம்"
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X