குதிரையில் சென்று உணவு டெலிவரி: ஊழியரை தேடுகிறது ‛ஸ்விக்கி'

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
மும்பை-'மும்பை கன மழைக்கு இடையே குதிரையில் சென்று உணவு, 'டெலிவரி' செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, 'ஸ்விக்கி' நிறுவனம் அறிவித்துள்ளது.'ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு, 'டெலிவரி' செய்யும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது. இருசக்கர வாகனம்அதில் பணியாற்றும் ஊழியர்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை-'மும்பை கன மழைக்கு இடையே குதிரையில் சென்று உணவு, 'டெலிவரி' செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, 'ஸ்விக்கி' நிறுவனம் அறிவித்துள்ளது.'ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு, 'டெலிவரி' செய்யும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகிறது.



latest tamil news





இருசக்கர வாகனம்



அதில் பணியாற்றும் ஊழியர்கள், இருசக்கர வாகனங்களின் உதவியுடன் இந்த பணியை செய்கின்றனர்.மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் கன மழைக்கு இடையே முதுகில் உணவு டெலிவரி பையுடன் குதிரையில் விரையும், 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெறும், 6 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவில் அந்த ஊழியரின் முகம் தெரியவில்லை.


latest tamil news





விருப்பம்



இந்த வீடியோ, ஸ்விக்கி நிறுவனத்துக்கு விளம்பரத்தையும், நற்பெயரையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, அடாத மழையிலும் விடாது பணியாற்றிய அந்த ஊழியரை பாராட்ட ஸ்விக்கி நிறுவனம் விரும்பியது.எனவே, 'குதிரையில் சென்ற அந்த ஊழியர் குறித்து சமூக வலைதளம் வாயிலாக முதலில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, ஸ்விக்கி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
07-ஜூலை-202214:52:39 IST Report Abuse
sankar ஸ்விக்கி காரன் சிம்பலிக்கா காட்டுறான். பலே.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜூலை-202213:07:42 IST Report Abuse
Ramesh Sargam தகவல் தெரிவிப்பவர்களுக்கு, 5,000 ரூபாய் பரிசு. ஓகே. அடாது பெய்த மழையிலும், விடாமல் தன்பணியை செவ்வனே செய்த அந்த ஊழியருக்கு என்ன பரிசு - ஒரு கார், அல்லது ஒரு ஆட்டோ? அப்படி ஏதாவது கொடுத்தால், அவர் தன்பணியை மேலும் சிறப்பாக செய்ய அதிக வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
07-ஜூலை-202212:07:03 IST Report Abuse
Raa நடிகர் விவேக் பாணியில்: விளம்பர கம்பெனிகலே நோட் பண்ணிகோங்கப்பா..நோட் பண்ணிகோங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X