பாகிஸ்தானிலும் கொட்டுது மழை: 25 பேர் பலி

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கராச்சி-நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவெட்டா மாவட்டத்தில், 300 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே
 பாகிஸ்தானிலும் கொட்டுது மழை: 25 பேர் பலி

கராச்சி-நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஏழு குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவெட்டா மாவட்டத்தில், 300 குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இங்கு ஒரு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், குவெட்டா புறநகரில் ஒரு வீடு இடிந்து மூன்று பெண்கள், நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.

மண்டி என்ற இடத்தில் குளத்தில் இருந்து இரு சிறுமியர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மஸ்துங் மாவட்டம் தாஷ்ட் என்ற இடத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து இரு பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.பாகிஸ்தான் - -ஈரான் எல்லை அருகே மாண்ட் என்ற கிராமத்தில் மூன்று குழந்தைகளும், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஐந்து பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜூலை-202212:38:54 IST Report Abuse
Ramesh Sargam 'பாகிஸ்தானிலும்' கொட்டுது மழை - இந்த தலைப்பை கூர்மையாக கவனியுங்கள். பொதுவாக புண்ணியம் செய்பவர்கள் உள்ள பூமியில்தான் மழை பெய்யும், பயிர்கள் விளையும் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால், தலைப்பில் 'பாகிஸ்தானிலும்', என்று வந்திருக்கிறது. அங்குதான் சந்தேகம். 'பாகிஸ்தானிலும்' புண்ணியம் செய்தவர்கள் உண்டா... என்கிற சந்தேகத்தில் அப்படி போட்டிருக்கிறாரோ...? இருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X