பழனிசாமி தரப்பு குஷி; பன்னீர்செல்வம் 'அப்செட்'

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது பழனிசாமி தரப்பினரிடம், மிகுந்த மகிழ்ச்சியையும், பன்னீர்செல்வம் தரப்பினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்பதால், பொதுக்குழு நிகழ்வுகளை அமர்க்களப்படுத்த, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. பொதுக்குழு முடிந்ததும், தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு
ADMK,Panneerselvam,Palaniswami,அதிமுக,பன்னீர்செல்வம்,பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது பழனிசாமி தரப்பினரிடம், மிகுந்த மகிழ்ச்சியையும், பன்னீர்செல்வம் தரப்பினரிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்பதால், பொதுக்குழு நிகழ்வுகளை அமர்க்களப்படுத்த, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. பொதுக்குழு முடிந்ததும், தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ஆலோனை நடத்தி வருகிறார்.

பொதுக்குழுவை புறக்கணித்து விட்டு, அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானம் செல்லாது என, மீண்டும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷனை அணுகுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.


latest tamil news




நவீன தொழில்நுட்பத்தில் அழைப்பிதழ்

அ.தி.மு.க., பொதுக்குழுவில், அழைப்பிதழ் இல்லாதவர்கள் உள்ளே வருவதை தடுக்க, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், வரும் 11ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து, பொதுச் செயலர் பதவியை உருவாக்கவும், தற்காலிக பொதுச் செயலராக பழனிசாமியை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு ஏற்பாடுகளை, பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செய்து வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வெளியே மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், சமூக இடைவெளி பின்பற்றி, இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த பொதுக்குழுவுக்கு பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, மோதல் ஏற்படாமல் இருக்க, உரிய பாதுகாப்பு வழங்கும்படி, போலீஸ் டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர்த்து, மற்றவர்கள் வருவதை தடுக்க, அழைப்பிதழில் 'கியூஆர் கோடு' தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வருவோரை மட்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, பொதுக்குழு நடத்த, அரசு தடை விதித்தால், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
07-ஜூலை-202214:40:52 IST Report Abuse
sankar இனிமேல் நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்க்க பீஜேபீ காரனுங்க ஆவலா காத்திருக்காங்க.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202211:16:47 IST Report Abuse
raja வரும் பதினோராம் தேதி திருட்டு தீயசக்தி திமுகவிடம் நெருக்கம் காட்டும் பன்னீர் அதிமுகவிலிருந்து ஒழித்து கட்ட படுவார்.....
Rate this:
Cancel
07-ஜூலை-202210:54:28 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) பொதுக்குழு அழைப்பிதழில் 'கியூஆர் கோடு' தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அருமை. ஆனால் இது போன்ற மாற்றத்தை ஏன் இவர்கள் ஆட்சி செய்யும்போது அரசு அலுவல்களில் கொண்டு வரவில்லை? கொள்ளையடிப்பதற்கு கூட்டம் போடுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த கொள்ளைக்கூட்டமும் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அது நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X