தே.ஜ., கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி?

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அமைச்சர் பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அமைச்சர் பதவியை நேற்று அவர் ராஜினாமா செய்தார்.latest tamil newsதேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தார் அப்பாஸ் நக்வியும், உருக்காலைத்துறை அமைச்சராக ஆர்.சி.பி.சிங்கும் பதவி வகித்து வந்தனர். இருவருமே ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியில் இருந்தனர்.உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வை சேர்ந்த பலர் எம்.பி.,யாக தேர்வாகினர். அதில், முக்தார் அப்பாஸ் நக்விக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பீஹாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஆர்.சி.பி.சிங், பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டி வருவதை அடுத்து, அவர் எந்த நேரத்திலும் பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரின் அதிருப்திக்கு அவர் ஆளானார். எனவே, அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. விதிகளின்படி, இவர்கள் இருவருமே, எம்.பி.,க்களாக இல்லாமல், அமைச்சர்களாக இடைவெளியின்றி பதவியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.எம்.பி.,யாக இல்லாதவர் அமைச்சராக பதவி வகிக்கலாம். ஆனால் ஆறு மாத காலத்திற்குள் மீண்டும் எம்.பி.,யாக வேண்டும்.

அதன்படி இன்னும் ஆறு மாதங்களுக்கு இவர்கள் அமைச்சர்களாக நீடிக்க முடியும்.ஆனால், அதற்கு முன் அமைச்சர் பதவியை விட்டு முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும். பிறகு மீண்டும் இவர்கள் அமைச்சர்களாக, புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, திரிபுராவில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆகிவிட்டதால், அவர் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி., சீட் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. இதைத்தவிர, அடுத்த சில மாதங்களில், வேறெந்த ராஜ்யசபா எம்.பி., சீட்டுகளுக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லைஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்.சி.பி.சிங் பங்கேற்றனர். அப்போது, இருவரும் தங்கள் அமைச்சர் பதவிக்கு சிறப்பான பங்களிப்பை தந்ததாக பிரதமர் பாராட்டினார்.

கூட்டம் முடிந்த பின் இருவரும் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருவதை அடுத்து, ஆகஸ்ட் 6ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், 788 பேர் ஓட்டளிக்க உள்ளனர். பா.ஜ.,வுக்கு மட்டுமே, 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.பி.,க்கள் இருப்பதால், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.இந்நிலையில், தே.ஜ., கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'இதன் காரணமாகவே, இவருக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கப்படவில்லை' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரை, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்வதன் வாயிலாக, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என, பா.ஜ.,வை விமர்சித்து வரும் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கவும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


latest tamil newsஎதிர்க்கட்சிகள் தவிப்பு!

துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகி விட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தை கூட்டிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அமைதி காத்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாததால், துணை ஜனாதிபதி தேர்தலிலும் நிறுத்த விரும்பவில்லை என, அக்கட்சி கூறி விட்டது. நேரடி அரசியலில் இல்லாத, பிரபலமான ஒருவரை நிறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் முயற்சி கொண்டுள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் துவங்கியும், வேட்பாளர் தேர்வுக்கான கூட்டத்தை கூட கூட்ட முடியாமல், எதிர்க்கட்சிகள் தவிக்கின்றன.துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வின் வெற்றி உறுதியாகி விட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தை கூட்டிய, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அமைதி காத்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாததால், துணை ஜனாதிபதி தேர்தலிலும் நிறுத்த விரும்பவில்லை என, அக்கட்சி கூறி விட்டது. நேரடி அரசியலில் இல்லாத, பிரபலமான ஒருவரை நிறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் முயற்சி கொண்டுள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் துவங்கியும், வேட்பாளர் தேர்வுக்கான கூட்டத்தை கூட கூட்ட முடியாமல், எதிர்க்கட்சிகள் தவிக்கின்றன.- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07-ஜூலை-202219:16:24 IST Report Abuse
கல்யாணராமன் சு. யஷ்வந்த் சின்ஹாவே இந்த பதவிக்கும் போட்டியிட முடியாதா ?
Rate this:
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
07-ஜூலை-202212:18:45 IST Report Abuse
MANI DELHI இதுவரை எதிலும் சிக்காத ஒரு இஸ்லாமியர். பிஜேபி கட்சியில் பல நாட்களாக இருப்பவர். சிறுபாண்மையினர் என்பதை தாண்டி சித்தாந்த ரீதியில் செயல்படும் அரசியல் அமைப்பில் மதசார்பற்ற நிலையை என்றும் விட்டுகுடுக்காத ஒரு நபராக பார்க்கிறேன். ஆரிப் முகம்மது கான் தேவை தான். ஆனால் இன்று அவரை கேரளாவில் இருந்து இங்கு கொண்டுவந்தால் உண்டிஅல் குலுக்கிகளையும், கிருத்துவ மற்றும் இஸ்லாமியர்களின் ஆதிக்கத்தை அடக்கி வைக்கவும் இயலாமல் போய்விடும். கம்மிகள் என்றும் தேசத்துரோகிகள் தான். இஸ்லாமியராக இருந்தாலும் தேசிய சிந்தனை உள்ளதால் அவருக்கு மாற்று இல்லாத பட்சத்தில் இங்குகொண்டுவருவது யாருக்கும் பயனில்லை. பிஜேபியின் வளர்ச்சியில் தென்னகம் தவிர மற்ற இடங்களில் நக்வி குறிப்பாக சிறுப்பின்மையினர் மத்தியில் அறியப்பட்டவர்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202211:15:17 IST Report Abuse
raja வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X