தெற்கு ரயில்வேக்கு ரூ.922 கோடிவருவாய்

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை-தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து வாயிலாக வருவாயை பெருக்கும் வகையில், ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தெற்கு ரயில்வேயில், இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில், 1,000 கோடி கிலோ சரக்கு கையாளப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 310 கோடி கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, மொத்தம் 922

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து வாயிலாக வருவாயை பெருக்கும் வகையில், ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.



latest tamil news



தெற்கு ரயில்வேயில், இந்த நிதி ஆண்டில் முதல் காலாண்டில், 1,000 கோடி கிலோ சரக்கு கையாளப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 310 கோடி கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, மொத்தம் 922 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இது, இதற்கு முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில், 36 சதவீதம் அதிகம்.நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், சிமென்ட், உணவு தானியம், 'ஸ்டீல்' கையாளுதல் அதிகரித்து உள்ளன.அனல் மின் உற்பத்தி நிலையங்களில், நிலக்கரி பயன்பாடு அதிகரித்துள்ளது.


latest tamil news



இதனால், ரயிலில் நிலக்கரி எடுத்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. அதுபோல், கட்டுமான பணிகளுக்கான ஸ்டீல் பயன்பாடும் அதிகரித்து உள்ளது.கடந்த மாதத்தில் மட்டும், 182 ரயில்கள் வாயிலாக, பெட்ரோலியம்பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202217:35:04 IST Report Abuse
அப்புசாமி என்ன பிரயோசனம்?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
07-ஜூலை-202216:14:46 IST Report Abuse
Sai 1,000 கோடி கிலோ = 1 கோடி டன் மருந்து மாத்திரைகளை குறிப்பிடுவதுபோல மில்லிகிராமில் mg குறிப்பிட்டிருக்கலாம் இந்த நாடு ஏன் இப்படி போய்க்கொண்டிருக்கிறது?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07-ஜூலை-202213:34:52 IST Report Abuse
Ramesh Sargam ரூ.922 கோடி வருவாய் தெற்கு ரயில்வேக்கு பெற்று தந்த இந்த பகுதி மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் மேலும் பல புதிய வழித்தடங்களை அறிவித்து, மேலும் பல வசதிகள் செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும். வருமானம் வரும் ஆண்டுகளில் மேலும் பெருகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X