இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: தமிழ் இளைஞர்கள் 2 பேர் கொலை

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்'டிவி' நிருபர் தலைமறைவுபோலீஸ் மீண்டும் ஏமாற்றம் ராய்ப்பூர்-காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்த 'வீடியோ'வை, மோசடியாக பயன்படுத்திய வழக்கில், தனியார் 'டிவி சேனல்' நிருபர் தலைமறைவாக உள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வயநாடு தொகுதி அலுவலகம் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டது. இந்த
இன்றைய கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
'டிவி' நிருபர் தலைமறைவுபோலீஸ் மீண்டும் ஏமாற்றம்


ராய்ப்பூர்-காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்த 'வீடியோ'வை, மோசடியாக பயன்படுத்திய வழக்கில், தனியார் 'டிவி சேனல்' நிருபர் தலைமறைவாக உள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வயநாடு தொகுதி அலுவலகம் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பதிலளித்த ராகுல், 'அவர்கள் குழந்தைகள்; அவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை' என, குறிப்பிட்டார்.இந்நிலையில், முஸ்லிம் மதம் குறித்து பேசி, சர்ச்சையில் சிக்கிய நுாபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், தலை துண்டிக்கப்பட்ட, டெய்லர் கன்னையா லால் தொடர்பான நிகழ்ச்சியை தனியார் 'டிவி' சேனல் ஒளிபரப்பியது.அதில், இந்நிகழ்ச்சிக்கு சிறிதும் தொடர்பில்லாத வயநாடு விவகாரம் குறித்து ராகுல் கூறியது இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை துாண்டியதாக காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், பா.ஜ., ஆளும் உ.பி., ஆகிய மாநிலங்களில், அந்த 'டிவி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிருபர் ரோஹித் ரஞ்சன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் சத்தீஸ்கர் காவல் கண்காணிப்பாளர் உதயன் பெஹர் கூறியதாவது:நேற்று முன்தினம் நாங்கள் ரோஹித் ரஞ்சனை கைது செய்ய, உ.பி., காஜியாபாத் சென்றோம். அவர் வீடு பூட்டியிருந்தது. அவரை நொய்டா போலீசார் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நொய்டா போலீஸ் நிலையம் சென்று கேட்டபோது, அவர்கள் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சில மணி நேரத்தில் ரோஹித் ரஞ்சனை கைது செய்து, ஜாமினில் விடுவித்ததாக போலீஸ் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ரோஹித் ரஞ்சனை கைது செய்ய, மறுநாள் அவர் வீட்டிற்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டிருந்தது. அதனால் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக அறிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


சர்ச்சைக்குரிய பேச்சுஅஜ்மீர் தர்கா மதகுரு கைதுஜெய்ப்பூர்-முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ள நுாபுர் சர்மாவின் தலையை துண்டிக்கும்படி உத்தரவிட்ட அஜ்மீர் தர்கா மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அஜ்மீர் தர்கா மதகுருவான சல்மான் சிஸ்டி, ஒரு 'வீடியோ' பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., முன்னாள் செய்தி தொடர்பாளர் நுாபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு, தன் வீட்டை பரிசாக தருவதாக, சல்மான் கூறியுள்ளார். இப்பிரச்னையில் அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, இரு தரப்பினர் இடையே வெறுப்புணர்வை துாண்டி, வன்முறையை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், சல்மான் சிஸ்டியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்
முன்விரோத தகராறுகுடிசை வீட்டிற்கு தீ


கடலுார்-முன்விரோத தகராறில் குடிசை வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார், பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி ராஜலட்சுமி, 55; இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், 21; என்பவர் தீ வைத்து கொளுத்தியதாக அவர் மீது ராஜலட்சுமி கடலுார், துறைமுகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து காளிதாசை தேடி வருகின்றனர்.


latest tamil news
குட்கா பறிமுதல்3 பேர் கைதுதிருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே குட்கா பொருட்கள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் கொடுக்கப்பட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஏழுமலை, 45; மளிகைக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.மேலும், கடைக்கு குட்கா சப்ளை செய்த டி.அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, 38; பாண்டியன், 27; ஆகியோரும் பிடிபட்டனர்.இவர்களிடமிருந்து 40 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஏழுமலை உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.


'பாலீஷ்' போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் 5 சவரன் 'அபேஸ்


நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் அருகே 'பாலீஷ்' போட்டு தருவதாக கூறி, பெண்ணிடம் 5 சவரன் நகையை அபகரித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், மேல்பாதியைச் சேர்ந்தவர் கீதா, 50. இவர் தன் கணவர் குமாரிடம் விவாகரத்து பெற்று, தனியாக வசிக்கிறார். நேற்று காலை கீதா வீட்டில் இருந்தபோது அங்கு இருவர் பைக்கில் வந்தனர்.அவர்கள் குறைந்த செலவில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்று அமர வைத்தனர். முதலில் வெள்ளி பொருட்களுக்கு பாலீஷ் போடுவதாக கூறினர்.வீட்டில் இருந்த வெள்ளி விளக்கு போன்றவற்றை கீதா கொடுத்தார். அதை பாலீஷ் செய்து கொடுத்தனர். வெள்ளி பொருட்கள் புதியது போல மாறியன.இதை நம்பிய கீதா, தன் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் தாலி செயினை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிய இருவரும், 'வெந்நீரில் தான் தங்க நகையை பாலீஷ் போட முடியும். எனவே வெந்நீர் எடுத்து வாருங்கள்' என, கூறினர்.


'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கி யவர் 'சஸ்பெண்ட்';கோவையில் பொது மக்களிடம் 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கிய தண்டல்காரர், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் செய்யவும், வாரிசு சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று போன்றவை வழங்கவும், வருவாய்த்துறை அலுவலகங்களில், அதீதமாக லஞ்சம் வாங்கப்படுகிறது.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்தாலும், எந்த அலுவலர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை; துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் இந்த வேலைகளைச் செய்வதற்கு, புரோக்கர்கள் வலம் வருகின்றனர். சில அலுவலகங்களில், கீழ் நிலை அலுவலர்களே, மக்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வேலைகளைச் செய்து கொடுக்கின்றனர்.இவர்கள் வாங்கும் லஞ்சம், வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல நிலையிலுள்ள அலுவலர்களுக்கும் பகிரப்படுகிறது.

இதற்கு உதாரணமாக, சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்திலுள்ள தண்டல்காரர் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாறுதல் செய்து தருவதாகவும், பத்திர நகல் எடுத்துத் தருவதாகவும் கூறி, 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கியுள்ளார்.சிலருக்கு பணம் வாங்கிக் கொண்டு, வேலையையும் செய்து தரவில்லை. புகார் எழுப்பிய பின் சிலருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான செய்தி, நமது நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக, கோவை டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் உத்தரவின்பேரில், கோவை தெற்கு தாசில்தார் சரண்யா, சம்பந்தப்பட்ட தண்டல்காரர் அருளானந்தத்தையும், பணம் கொடுத்த பெண்கள் இருவரையும், தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலையில் வரவழைத்து, விசாரணை நடத்தினார்.அதில், இரண்டு பெண்களும் பணம் கொடுத்தது தெரியவந்தது. ஒரு பெண் 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தைப் பெற்றுக் கொண்ட தாசில்தார், தண்டல்காரர் அருளானந்தத்தை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.தாசில்தார் சரண்யா கூறுகையில், ''மேலும் யாராவது அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால், ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

-நமது நிருபர்-


பாலிஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ்


நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் அருகே 'பாலீஷ்' போட்டு தருவதாக கூறி, பெண்ணிடம் 5 சவரன் நகையை அபகரித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர்.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், மேல்பாதியைச் சேர்ந்தவர் கீதா, 50. இவர் தன் கணவர் குமாரிடம் விவாகரத்து பெற்று, தனியாக வசிக்கிறார். நேற்று காலை கீதா வீட்டில் இருந்தபோது அங்கு இருவர் பைக்கில் வந்தனர்.அவர்கள் குறைந்த செலவில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்று அமர வைத்தனர். முதலில் வெள்ளி பொருட்களுக்கு பாலீஷ் போடுவதாக கூறினர்.வீட்டில் இருந்த வெள்ளி விளக்கு போன்றவற்றை கீதா கொடுத்தார். அதை பாலீஷ் செய்து கொடுத்தனர். வெள்ளி பொருட்கள் புதியது போல மாறியன.இதை நம்பிய கீதா, தன் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சவரன் தாலி செயினை கழற்றி கொடுத்தார். அதை வாங்கிய இருவரும், 'வெந்நீரில் தான் தங்க நகையை பாலீஷ் போட முடியும். எனவே வெந்நீர் எடுத்து வாருங்கள்' என, கூறினர்.உடனே கீதா வெந்நீர் வைக்க சமையலறைக்கு சென்றார். அந்த சமயத்தை பயன்படுத்தி இருவரும் 5 சவரன் நகையுடன் பைக்கில் தப்பினர்.வெளியே வந்து பார்த்தபோது அவர்களை காணாமல் ஏமாந்ததை உணர்ந்த கீதா அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்த புகாரின் படி, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நகையை அபகரித்து சென்ற நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.போலீஸ் விசாரணையில், அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என, தெரிய வந்துள்ளது. அவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் 94981 00602 எண்ணில் தெரிவிக்கலாம் என, போலீசார் கூறியுள்ளனர்.


12 கிலோ கஞ்சா பறிமுதல் கருமத்தம்பட்டியில் மூவர் கைது

கருமத்தம்பட்டி :கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற மூவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த ராமாட்சியம் பாளையம் பாலம் அருகே சந்தேகப்படும் படியான நபர்கள் நடமாடுவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மூவரையும் விசாரித்தனர்.முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள், சூலுார் அடுத்த முதலிபாளையத்தை சேர்ந்த முருகன்,40, சென்னையை சேர்ந்த சபி முகமது, 38, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிபின் பிரிக்,28 என்பது தெரிந்தது. மூவரும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது.மூவரிடம் இருந்து, 12 கிலோ கஞ்சா மற்றும், 25 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முருகன் மீது பல கஞ்சா வழக்குகள் உள்ளதும் அவற்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்று வந்த மூவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


உலக நிகழ்வுகள்
தமிழ் இளைஞர்கள் 2 பேர் கொலை; மியான்மர் பயங்கரவாதிகள் அட்டூழியம்யாங்கூன்-தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


latest tamil newsநம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மோரெக் நகரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மோகன், 28, அய்யனார், 35, ஆகிய இருவரும் வசித்தனர். அங்கு வசித்த பலர் அருகிலுள்ள மியான்மர் நாட்டில் சென்று வேலை செய்கின்றனர். இதைப் பார்த்து மோகனும், அய்யனாரும் எல்லை தாண்டி மியான்மர் சென்றனர். மோகன் ஆட்டோ டிரைவர் வேலைக்குச் சேர்ந்தார். அய்யனார் கடை நடத்தினார். இந்நிலையில், இந்தியா - -மியான்மர் எல்லையில் தமு என்ற இடத்தில் இருவரும் நெற்றியில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். மியான்மரில் 'பியூஷாதி' என்ற இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மோகன், அய்யனார் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருவரது உடல்களும் மியான்மர் அரசு மருத்துவமனையில் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மோரெக் நகர தமிழ் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, மத்திய அரசு உத்தரவுப்படி சர்வதேச எல்லை மூடப்பட்டது. ஆனால் இரு நாட்டு மக்களும் தங்களது வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக எல்லையை கடந்து சென்று வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் உளவு பார்த்ததாக மியான்மர் ராணுவம் சந்தேகித்து இருக்கலாம்.கொல்லப்பட்ட இருவரும் மோரெக் நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த சம்பவத்தைக் கண்டித்து மோரெக் நகரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X