தமிழகத்தை பிரிப்பதில் ஆர்வமில்லை: மத்திய அமைச்சர் வி.கே.சிங் கருத்து

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
திருநெல்வேலி: ''தமிழகத்தை பிரிப்பது குறித்து சிந்திப்பதற்கு பதிலாக அதன் வளர்ச்சிக்கு முயற்சிப்போம்'' என மத்திய தரைவழி போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. முன்னதாக கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக சில தொகுதிகளுக்கு ஒரு மத்திய அமைச்சர் வீதம் பொறுப்பு
VK Singh, Tamil Nadu, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி: ''தமிழகத்தை பிரிப்பது குறித்து சிந்திப்பதற்கு பதிலாக அதன் வளர்ச்சிக்கு முயற்சிப்போம்'' என மத்திய தரைவழி போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. முன்னதாக கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக சில தொகுதிகளுக்கு ஒரு மத்திய அமைச்சர் வீதம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி சிவகங்கை வேலூர் ஆகிய தொகுதிகளுக்கு நான் பொறுப்பாளர். எனவே அடிக்கடி தமிழகம் வந்து மக்களை சந்திப்பேன்.


latest tamil news



கடந்த 8 ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு ஜாதி மத பாகுபாடுகள் பார்க்காமல் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. சில 4 வழிச்சாலை திட்டப்பணிகள் முடியாமல் இருப்பதற்கு நில எடுப்பு வனத்துறை உள்ளிட்ட காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து திட்டங்களை நிறைவு செய்வோம்.

தமிழகத்தில் நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. தமிழகத்தை இரண்டாக பிரிக்க தேவையில்லை. ஒரிஜினல் தமிழ்நாடு ஏற்கனவே பிரிக்கப்பட்ட மாநிலம் தான். பிரிவினை குறித்து சிந்திப்பதற்கு பதில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முயற்சிப்போம். அ.தி.மு.க.உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.விற்கு ஆர்வம் இல்லை என்றார். பா.ஜ. மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
07-ஜூலை-202216:50:35 IST Report Abuse
Easwar Kamal என்னுங்கடா இதையே கர்நாடகாவுல சொல்லி பாருங்க அதுக்கு அப்புறம் இருக்கு. தமிழ்நாட்டுல ஏன்னு கேக்க நாதி இல்லை. அதன் வரவன் போறவன் எல்லாம் கூவிக்கிட்டு அலையறானுங்க. ஒழுங்கா ஆட்சி நடத்த பாருங்க இல்லாட்டி யாரும் எதிர் பார்க்காத ரிசல்ட் வரும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
07-ஜூலை-202216:17:19 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்தை மூன்று மாநிலங்கள் , மற்றும் சென்னையை தனி யூனியன் பகுதியாக பிரிக்காமல் , இங்கு வளர்ச்சி பணிகள் நடக்காது .....கருணாநிதி அண்ணாதுரை ராமசாமியால் அழுகிப்போன , ஒரு மாநிலம் தமிழகம் ..அந்த நிலை மாறவேண்டுமானால் , தெய்வீகம் தேசியம் நிலைக்கவேண்டுமானால் , ஆபிரகாமிய மத தீவிரவாதம் பிரிவினைவாதம் இல்லாமல் போக்கவேண்டுமானால் தமிழகம் பிரிக்கப்படுவதே நல்லது ...திருட்டு திராவிடம் நாத்திக வன்முறை ஊழல் , முற்றியும் ஒழிய தமிழக மாநில பிரிவினை மிக அவசியம் ....தமிழக மக்கள் நலனுக்காகவாவது பாஜக இதனை செய்யவேண்டும் ...போதும் திருட்டு திராவிட ஆட்சியையும் சித்தாந்தமும் ......
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
07-ஜூலை-202218:56:23 IST Report Abuse
தமிழன்ஆசைப்படுகிறீரா????...
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
07-ஜூலை-202214:14:25 IST Report Abuse
Viswam அப்ப கட்சி காலியா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X