ஏற்றுமதி விவசாயிக்கு ரூ.2 லட்சம் பரிசு

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மதுரை : ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.வேளாண், தோட்டக்கலை பயிர்கள் எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவராக இருக்க வேண்டும். விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை மாவட்ட கண்காணிப்பு குழு கமிட்டி பரிந்துரை செய்து மாநில
ஏற்றுமதி விவசாயிக்கு ரூ.2 லட்சம் பரிசு

மதுரை : ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

வேளாண், தோட்டக்கலை பயிர்கள் எதுவாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவராக இருக்க வேண்டும். விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் ரூ.100. விண்ணப்பத்தை மாவட்ட கண்காணிப்பு குழு கமிட்டி பரிந்துரை செய்து மாநில கமிட்டிக்கு அனுப்பும். எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு எடையில் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, அதன் மதிப்பு உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிக்கு ஏற்றுமதியாளர் விருதும் ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்படும் என விற்பனை வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-ஜூலை-202207:51:42 IST Report Abuse
duruvasar To find out such eligible farmer and to design the eligibilty criteria government will constitute an expert committee under the chairmanship of a retired judge first. This the normal protocol under ..Dravidian model
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X