செஞ்சி தற்காலிக பஸ் நிலையம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
செஞ்சி-செஞ்சியில் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிக்காக, புதிய பைபாஸ் சாலையில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..செஞ்சி பஸ் நிலையத்தில் தெற்கு பகுதியில் இருந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6
செஞ்சி தற்காலிக பஸ் நிலையம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

செஞ்சி-செஞ்சியில் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிக்காக, புதிய பைபாஸ் சாலையில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.செஞ்சி பஸ் நிலையத்தில் தெற்கு பகுதியில் இருந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.இதனால், தற்காலிக ஏற்பாடாக திண்டிவனம் சாலையில் பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள காலி இடத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பயணிகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்குடை, கழிவறை, மின் விளக்கு வசதிகள் செய்வதற்கு செஞ்சி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.தற்போது மேற்கு பகுதியில் தென்னங்கீற்றில் 50 பேர் தங்கும் அளவிற்கு ஒரு சிறிய கொட்டகையும், திண்டிவனம் ரோட்டில் மிக சிறிய அளவில் நிழலுக்காக தென்னங்கீற்றைக் கொண்டு கொட்டகையும் அமைத்துள்ளனர்.செஞ்சியைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணிகளுக்காக செஞ்சிக்கு வந்து செல்கின்றனர். பயணிகள் அதிகளவில் வருவதால், சிறிய கொட்டகைகள் போதுமானதாக இல்லாமல், பெரும் பகுதி மக்கள் வெட்ட வெளியில் வெயிலில் நிற்கின்றனர்.

மழை பெய்தால், தென்னங்கீற்று கொட்டகையில் தண்ணீர் ஒழுகி மக்கள் நிற்க முடியாத நிலை ஏற்படும். அத்துடன் இந்த கொட்டகைகளில் கொட்டியுள்ள மண்ணை சரி வர நிரவாமல் மேடும் பள்ளமுமாக ஒழுங்கற்ற முறையில் போடப்பட்டுள்ளதுடன், பயணிகள் உட்கார்ந்து பஸ்சுக்காக காத்திருக்க எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை.கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு பொது விழாக்களுக்கும், பொது மக்கள் தங்குவதற்கும் அரசு தென்னங்கீற்று கொட்டகைகளை பயன்படுத்துவதில்லை. ஒரு நாள் விழா நடக்கும் சாதாரண விழாவிற்கும் தகர ஷீட்களைக் கொண்டே கூரை அமைக்கின்றனர்.தற்போது நடந்து வரும் பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் முடிவடைய குறைந்தது 5 மாதங்கள் ஆகும். அதுவரை மழை, வெயில் மற்றும் தீ ஆபத்து ஏதும் இல்லாமல் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க தகர ஷீட்களை கொண்டு ஷெட் அமைக்க வேண்டும்.அதுமட்டுமின்றி தற்காலிக பஸ் நிலையத்தில், இதுவரை கழிவறை அமைக்கப்படவில்லை.

தற்காலிக பஸ் நிலையம் அமைத்துள்ள இடம் விவசாய நிலமாக இருந்த பகுதி. இங்கிருந்து மழை நீர் வடிவதற்கான வழிகள் புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதால் தடைபட்டுப் போனது.இதனால் மழைநீர் வடியாமல் தற்காலிக பஸ் நிலையத்தில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இந்த இடத்தில் கிராவல் மண்ணைக் கொட்டி மேடான பகுதியாக மாற்ற வேண்டும். மின் விளக்குகளை குறைந்த எண்ணிக்கையில், மிக உயரமான இடத்திலும் பொருத்தி உள்ளனர். இது போதுமானதாக இல்லை.அத்துடன் குடிநீருக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

தற்காலிக பஸ் நிலையம் செயல்பட துவங்கி 15 தினங்களைக் கடந்து விட்ட நிலையில் அடிப்படை வசதிகளை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் தற்காலிக பஸ் நிலையத்தில் தேவையான அடிப்படை வசதிகளை மிக விரைவாக செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X