வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொடைக்கானல்: ''தி.மு.க.,வின் ஆ.ராசா தனித்தமிழ்நாடு பற்றி கூறினால் பா.ஜ., வேடிக்கை பார்க்காது. தக்க பதிலடி கொடுக்கும்'' என, பா.ஜ.,வின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவர் கூறியதாவது: 2024 - - 26 ல் நடக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தலில் தென் மாநிலங்களில் பா.ஜ., ஆளுங்கட்சியாக வரும். அதற்கு முன்னோட்டமாக கிராமங்களை நோக்கி தாமரை பிரசாரம் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன் லாக்கப் மரணங்களை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், தற்போது ஒன்றரை ஆண்டுகளில் 6 மரணங்கள் நடந்துள்ளது பற்றி கண்டுகொள்ளாதது கவலை அளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு பாதிப்பு
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் ரவுடியிசம் தலை துாக்கி உள்ளது. சென்னையில் கூலிப்படையினரால் சட்டம் ஒழுங்கு பாதித்து கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இதை தட்டி கேட்க வேண்டிய தமிழக போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
![]()
|
பா.ஜ., வேடிக்கை பார்க்காது
இங்கும் ஏக்நாத் ஷிண்டே போல் ஒரு குழு உருவாகும் சூழல் உள்ளது. தி.மு.க.,வின் ஸ்லீப்பர் செல்கள் பா.ஜ.,வில் சேர வாய்ப்புள்ளது. தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் நோக்கம் பா.ஜ.,விடம் இல்லை. அதை கூறியது நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட கருத்து. தி.மு.க.,வின் ராசா, தனித்தமிழ்நாடு எனக் கூறுவதை பா.ஜ., வேடிக்கை பார்க்காது. தக்க பதிலடி கொடுக்கும். அ.தி.மு.க.,வில் நடக்கும் உட்கட்சி பிரச்னையில் பா.ஜ., தலையிட விரும்பாது, என்றார்.