மழையால் பின்னலாடை ஆர்டர் குறைகிறது?

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்: நுால் விலை குறைந்தாலும், மழைக்காலம் துவங்கி விட்டதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைகிறது.கோடை மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.பஞ்சு விலை உயர்வால், கடந்த மே மாதம் வரை, 18 மாதங்கள் தொடர்ந்து நுால் விலை உயர்ந்து வந்தது. இதன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: நுால் விலை குறைந்தாலும், மழைக்காலம் துவங்கி விட்டதால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைகிறது.

கோடை மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவு ஆர்டர்கள் திருப்பூர் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.பஞ்சு விலை உயர்வால், கடந்த மே மாதம் வரை, 18 மாதங்கள் தொடர்ந்து நுால் விலை உயர்ந்து வந்தது. இதன் எதிரொலியாக, கடந்த மூன்று மாதங்களாக வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துவிட்டது.



latest tamil news




தமிழகத்தில், ஒசைரி நுால் விலை தற்போது குறையத்துவங்கியுள்ளது; கடந்த 1ம் தேதி கிலோவுக்கு 40 ரூபாய் விலை குறைக்கப்பட்டது. வரும் மாதங்களில் நுால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும், மழைக்காலம் துவங்கியுள்ளதால், உள்நாட்டு சந்தைக்காக ஆடை தயாரிக்கும் திருப்பூர் நிறுவனங்களுக்கு, ஆர்டர் வருகை மேலும் குறையும் நிலையை உருவாகியுள்ளது.

லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:
திருப்பூர் நிறுவனங்களுக்கு, குளிர் கால ஆடை தயாரிப்பு காலங்களில், மிக குறைந்தளவே ஆர்டர் கிடைக்கிறது. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டது. மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களில் தொடரும் மழையால், ஆர்டர் வருகை மேலும் குறைந்துள்ளது.பருவமழையால், வரும் நாட்களில் ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை மேலும் குறைவது தவிர்க்க முடியாததாகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு பின் அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு பின், திருப்பூரின் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறை எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிக ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - COIMBATORE,இந்தியா
07-ஜூலை-202209:52:27 IST Report Abuse
Mohan அட ஏன்யா மழை பேயும் போதே வாயி வெக்குறீங்க இனி கொஞ்சம் மழை இல்லாம போச்சுன்னா தண்ணி இல்லாம கஷ்டப்படணும் போல இருக்கு இவுனுகளுக்கு ஆர்டர் குரயுதாமா நன்னாரிகலா
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
07-ஜூலை-202209:12:09 IST Report Abuse
Neutral Umpire அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் பருத்தி ஆடைக்கு தேவை இருக்கிறது ..குட்டி நாடுகள் வியத்நாம் பங்களாதேஷ் போன்ற நாடுகள் நிறைய ஏற்றுமதி செய்கின்றன ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X