'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி' தி.மு.க.,வினர் அரசியலுக்கும் பொருந்தும்!

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி:'அக்னிபத்' தேச பக்தர்களுக்கான திட்டம். இதில் சேர பல லட்சம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்களை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது.'மாமியார் உடைத்தால் மண் சட்டி;
இப்ராஹிம், வாசன்

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் பேட்டி:'அக்னிபத்' தேச பக்தர்களுக்கான திட்டம். இதில் சேர பல லட்சம் பேர் விண்ணப்பித்து வருகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்த முதல்வர் ஸ்டாலின், தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்களை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார். ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிக்கிறது.

'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என்பது, தி.மு.க.,வினர் நடத்தும் அரசியலுக்கும் பொருந்தும்!


தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் இனியும் திருந்தா விட்டால், திருத்துவோம். மஹாராஷ்டிராவை போன்று தமிழகத்திலும் குடும்ப ஆட்சியை மாற்ற, அக்கட்சியில் இருப்பவர்களே செயல்படுவர். அக்கட்சியில், 30 ஆண்டு பயணித்தவன் என்பதால் சொல்கிறேன்.

உங்க பேச்சை பார்த்தால், 'ஆப்பரேஷன் தாமரை' பூர்வாங்க பணிகளை, தமிழகத்தில் சத்தமில்லாம ஆரம்பிச்சுட்டீங்க என்பது தெளிவாக தெரிகிறது.


த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தேர்தலின் போது, 'சொத்து வரியை உயர்த்த மாட்டோம்' எனக் கூறிய தி.மு.க., தற்போது ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்கிறது. இது, மக்கள் விரோத போக்கை காட்டுகிறது. தமிழகத்தில் திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பு அதிகரித்துள்ளது.


latest tamil news



முதல்வர், 'தமிழகத்தை முதல் மாநிலமாக்குவேன்'னு சொல்றார்... ஆனா, திருட்டு, கொள்ளையில முதலிடத்துக்கு போயிடுமோன்னு பயமா இருக்குது!


தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் பேச்சு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, நிதி ஆதாரங்களை பெருக்க முடியவில்லை எனக்கூறி, தி.மு.க, அரசு பதவி விலக வேண்டும். இல்லையேல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவை இரண்டையும் செய்யாமல், தமிழக மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றுகிறது. அதேசமயம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லா விட்டாலும், இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.

மத்திய அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்குது... அதனால செஞ்சிருப்பாங்க... மாநில அரசின் தலைமைக்கோ, 'தம் மக்கள்' மீது மட்டும் தானே அக்கறை இருக்குது!


மக்கள் நீதி மய்யம் கட்சி அறிக்கை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை சிறைப்பிடித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தன. இச்சூழலில், தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

என்ன தான் உதவி செய்தாலும், அவங்க குணத்தை காட்டுறாங்க பாருங்க... 'பாத்திரம் அறிந்து பிச்சையிடு' என, நம் முன்னோர் சும்மாவா சொல்லியிருக்காங்க?



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிஞன், மட்டகளப்பை,இலங்கை ஹி...ஹிஹி... ஹிஹிஹி திராவிட மாடல் ஆட்சி அதுதான்.
Rate this:
Cancel
07-ஜூலை-202214:03:24 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் 'நீ சொல்லித்தான் பாரேன்'...
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
07-ஜூலை-202213:39:17 IST Report Abuse
TRUBOAT ஏதோ ஒண்ணு உளறணும் பத்திரிகையில் பேர் வரணும்... இதை மட்டுமே தாரக மந்திரமா வச்சி செயல்படும் ஆட்கள் அதிகரிப்பால் இப்ப நிறைய உளறல்கள் வெளிய வருது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X