யார் இந்த லீனா மணிமேகலை? அவதூறு கிளப்பியதால் பல வழக்குகளில் சிக்கியவர்!

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: 'காளி' என்ற ஆவணப் படத்திற்காக, ஹிந்து தெய்வத்தை அவமதித்து 'போஸ்டர்' வெளியிட்டுள்ள இயக்குனர் லீனா மணிமேகலை மீது, ஏற்கனவே இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.தனிப்பட்ட விரோதத்தால், ஆதாரமில்லாமல் மலிவான விளம்பரத்திற்காக, 'மீ டூ' புகார் சுமத்தியிருப்பதாக, 2018ல், லீனா மணிமேகலை மீது, திரைப்பட இயக்குனர் சுசி கணேசன், சென்னை சைதாப்பேட்டை
லீனா மணிமேகலை, அவதூறு, வழக்குகள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'காளி' என்ற ஆவணப் படத்திற்காக, ஹிந்து தெய்வத்தை அவமதித்து 'போஸ்டர்' வெளியிட்டுள்ள இயக்குனர் லீனா மணிமேகலை மீது, ஏற்கனவே இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தனிப்பட்ட விரோதத்தால், ஆதாரமில்லாமல் மலிவான விளம்பரத்திற்காக, 'மீ டூ' புகார் சுமத்தியிருப்பதாக, 2018ல், லீனா மணிமேகலை மீது, திரைப்பட இயக்குனர் சுசி கணேசன், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.



உத்தரவாதம்


குறுக்கு விசாரணை நடக்கும்போது, கனடாவில் இருக்கும் ஹோக் பல்கலையில் படிப்பதற்கு செல்வதாக, லீனா அறிவித்தார். கனடா செல்லப் போவதாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் லீனா மனு தாக்கல் செய்தார். கிரிமினல் வழக்கு விசாரணையை தாமதிக்கும் நோக்கில், வெளிநாட்டுக்கு தப்பியோடும் முயற்சியை தடுக்கும்படியும், பாஸ்போர்ட்டை முடக்கும்படியும், சுசி கணேசன் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, லீனா பாஸ்போர்ட்டை முடக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, லீனா உயர் நீதிமன்றத்தை நாடினார். லீனாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததோடு, 'கிரிமினல் வழக்கில் ஆஜராக தேவையில்லை' என்ற விலக்கும் கிடைத்தது. இதையடுத்து, சுசி கணேசன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆறு மாதம் படித்துவிட்டு வர, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டார் லீனா.


latest tamil news


ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. கடந்த மே 23ல், கனடாவில் இருந்து திரும்புவதாகவும், இடைப்பட்ட மாதங்களில் தன் வழக்கறிஞர்கள் வழக்கை நடத்துவர் என்றும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டு, பிப்ரவரி மாதத்தில் கனடாவிற்கு சென்றார். சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், 'சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து வழக்கை மாற்ற வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார் லீனா. சென்னை செஷன்ஸ் கோர்ட், லீனாவின் மனுவை தள்ளுபடி செய்தது. தவறான தகவல்களை தந்ததோடு, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கண்டித்ததோடு, வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டது.



கொந்தளிப்பு


செசன்ஸ் கோர்ட் உத்தரவை எதிர்த்து, லீனா, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், சைதாப்பேட்டை நீதிமன்றம் வாய்தா மேல் வாய்தா அனுப்பி வருகிறது.ஒரு நாள் கூட விசாரணை நடக்காத நிலையில், உச்ச நீதிமன்றம் கொடுத்த நான்கு மாத கெடுவும், ஜூன் 6ம் தேதியோடு முடிந்து விட்டது.
இடையில், கனடாவில் தன் படிப்பின் காலம் நீடிக்கப்பட்டதாகவும், தன்னால் செப்டம்பர் மாதத்தில் தான் இந்தியா திரும்ப முடியும் என்றும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கில் ஆஜர் ஆகாமல், சமூக வலைதளத்தில் வழக்கை நடத்துவதாகவும், லீனா மீதும், பாடகி சின்மயி மீதும் 1.10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுசி கணேசன் வழக்கு தொடர்ந்தார். 'வழக்கு தொடர்பாக பத்திரிகைகளிலோ, சமூக வலைதளத்திலோ பேசக் கூடாது' என, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், லீனா மீண்டும் பேட்டி கொடுத்ததால், மே மாதம் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை, சுசி கணேசன் தொடர்ந்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தன் ஆவணப் படத்திற்காக, காளி தெய்வம் சிகரெட் குடிப்பது போல லீனா மணிமேகலை, கனடாவில் போஸ்டர் வெளியிட்டிருப்பது, கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அவர் மீதான பழைய வழக்குகளின் விசாரணை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


latest tamil news




உயர் நீதிமன்றம் கேள்வி


'இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்ட பின்னும், கவிஞர் லீனா மணிமேகலை ஏன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருட்டுப்பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவரை பற்றி, சமூக வலைதளத்தில் லீனா மணிமேகலை கருத்து பதிவிட்டார்.இதையடுத்து, லீனா மணிமேகலைக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில், சுசி கணேசன் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி இணைந்து, சுசி கணேசனுக்கு எதிராக, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இதையடுத்து, அவர்கள் இருவரிடமும் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுசி கணேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் குறித்து கருத்து தெரிவிக்க, இருவருக்கும் தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்றம் தடை விதித்தும், தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை, லீனா மணிமேகலை வெளியிட்டு வருகிறார்' என்றார். அதற்கு நீதிபதி, 'தடை விதித்த பின்னும், ஏன் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்?' என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய, லீனா மணிமேகலைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 21க்கு தள்ளிவைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
08-ஜூலை-202201:31:21 IST Report Abuse
Aarkay நிறைகுடம் ததும்பாது....
Rate this:
Cancel
nv -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202200:38:05 IST Report Abuse
nv இவளுக்கு தைரியம் இருந்தால் யேசு புகை பிடிப்பது மாதரி அல்லது ஒரு நபிகள் அப்படி செய்வது போல ஒரு படம் podattum அப்போ தெரியும்.. ஹிந்துக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று ஒரு அசட்டு தைரியம், வெளி நாட்டில் இருந்து இப்படி எடா கூடமா செய்ய வேண்டியது. இவளை எல்லாம் உள்ளே தள்ளி வைக்கணும்.
Rate this:
Cancel
Shantho -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூலை-202200:21:05 IST Report Abuse
Shantho அந்த பயமறியா பெண்ணிற்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X