ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்.,கிற்கு ஆக்சிஜன் திமுக: அண்ணாமலை கிண்டல்

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (67) | |
Advertisement
சென்னை: ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக தி.மு.க., உள்ளது. அதனை துண்டித்துவிட்டால், ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: பா.ஜ., ஆட்சிக்கு தென் மாநிலங்களுக்கு முக்கியததுவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேரை ராஜ்யசபா எம்.பி.,க்களாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஐ.சி.யு.,வில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக தி.மு.க., உள்ளது. அதனை துண்டித்துவிட்டால், ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


latest tamil newsசென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: பா.ஜ., ஆட்சிக்கு தென் மாநிலங்களுக்கு முக்கியததுவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேரை ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான அரசு, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும். வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதனை, தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.


latest tamil news
அரசியலை தாண்டி வாழ்த்தப்பட வேண்டியவர் இளையராஜா. இந்திய குடிமகனுக்கு, முதல் குடிமகன்அளித்த மிகப்பெரிய கவுரவம். மக்கள் வாழ்த்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மதம் ஜாதி கடந்தவர் இளையராஜா. அவருக்கு எந்தவித அடையாளமும் தேவையில்லை. எல்லாத்தையும் தாண்டியவர். அனைவருக்கு சமமான மனிதர்.

அம்பேத்கர் தொடர்பான புத்தகத்தில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா எழுதியது பல தரப்பினர் சொல்லும் கருத்து. புதிது கிடையாது. கோவையில், தனது பிறந்த நாள் விழாவின் போது, மாநில அரசு நல்ல வேலை செய்வதாக கூறினார். அனைத்தும் அவரின் தனிப்பட்ட கருத்தாக பார்க்கிறோம். மோடி பற்றி பேசியது தனிப்பட்ட கருத்து. அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. தனித்திறமையால் கிடைக்கும் அங்கீகாரத்தை கொச்சைபடுத்துவது வேதனையாக உள்ளது.தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க வேண்டும்.latest tamil news
திமுகவில் ஏக்நாத் ஷிண்டே உருவாக்குவோம் என கூறவில்லை. அது எங்களது வேலை கிடையாது. ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்று கூறினோம். மஹாராஷ்டிராவில் நடந்ததுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது.மக்களை ஆதரவை பெற்ற அன்பை பெற்று வாக்கை பெற்று ஆட்சிக்கு வருவது தான் பா.ஜ.,வின் நோக்கம். குடும்ப கட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்பது அர்த்தம். எந்த தனிப்பட்டமனிதரையும் முன்னிருத்து வளரும் கட்சி பா.ஜ., அல்ல. தொண்டர்களுக்கான கட்சிபுதியவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.


latest tamil newsஐ.சி.யு.,வில் கட்சியை வைத்துள்ள கே.எஸ். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஐ.சி.யு.,வில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜனாக தி.மு.க., உள்ளது. அதனை நிறுத்திவிட்டால், ஒன்றில் கூட டெபாசிட் கூட கிடைக்காது. ஓட்டு இயந்திரத்தில் அவர்களின் சின்னத்தை அச்சிடுவது கூட வீணாகிவிடும். அழகிரி அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, சிந்தி சிதறி கிடக்கும். கட்சியை ஒட்ட வைக்க 'பெவிக்விக்' வாங்கி தர தயாராக உள்ளோம்.

பா.ஜ.,விற்கு 2024 ல் 25 எம்.பி.,க்கள் கிடைக்கும். அது உறுதி. உருண்டு வருவோம். நடந்து வருவோம். அதனை அழகிரி பார்ப்பார். அன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். ஒரு கட்சி என்ன அவமானபடுத்தினாலும், கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கூட கூட்டணியில் இருப்போம் என காங்கிரஸ் நினைக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-202219:00:10 IST Report Abuse
பேசும் தமிழன் K S அழகிரி... நம்ம நாஞ்சில் சம்பத் போல... காறி துப்பினால் துடைத்து கொள்ளும் ஆள் போல் தெரிகிறது
Rate this:
Cancel
arjerlin - chennai,இந்தியா
07-ஜூலை-202217:49:24 IST Report Abuse
arjerlin நாடு ஐ சி யு வி இல் இருக்கிறது. காரணம் பிஜேபி
Rate this:
Cancel
Karthikeyan - Trichy,இந்தியா
07-ஜூலை-202216:38:38 IST Report Abuse
Karthikeyan சும்மா இருந்தவனுங்க எல்லாம் மந்திரியா,கவனர்ரா போயாச்சு...எனக்கு அதுபோல எப்ப வரும்னு தினமும் உளறிக்கொண்டிருக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X