கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி; விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க, மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாநகர், மாவட்டத்தில், 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற பள்ளி, கல்லுாரி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அனுமதி பெறுவதற்கான நெறிமுறைகள்,


கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க, மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாநகர், மாவட்டத்தில், 2011 ஜன., 1க்கு முன் கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற பள்ளி, கல்லுாரி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அனுமதி பெறுவதற்கான நெறிமுறைகள், அரசாணை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், 2018 ஜூலையில் வெளியிடப்பட்டன.
அத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்க, 6 மாதம் அவகாசம் வழங்கி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், www.tn.gov.in/tcp என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். இது ஒருமுறை மட்டும் வழங்கப்படும் வாய்ப்பு என்பதால், தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X