சமத்துவபுரம் புனரமைப்பு பணி தாசில்தார் பேச்சில் உடன்பாடு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
கெங்கவல்லி, நடுவலுாரில் உள்ள, சமத்துவபுர குடியிருப்புகள் சேதமடைந்ததால், புனரமைப்பு பணிக்கு, 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 58 வீடுகளுக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கியதாக, பாதிக்கப்பட்டோர், கடந்த ஜூன், 22ல், போராட்டம் நடத்தியதால், 11 பேர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர்.குடியிருப்புவாசிகளிடம் பேச்சு நடத்த, கெங்கவல்லி தாசில்தாருக்கு, கலெக்டர்


கெங்கவல்லி, நடுவலுாரில் உள்ள, சமத்துவபுர குடியிருப்புகள் சேதமடைந்ததால், புனரமைப்பு பணிக்கு, 1.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 58 வீடுகளுக்கு குறைந்த அளவில் நிதி ஒதுக்கியதாக, பாதிக்கப்பட்டோர், கடந்த ஜூன், 22ல், போராட்டம் நடத்தியதால், 11 பேர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர்.
குடியிருப்புவாசிகளிடம் பேச்சு நடத்த, கெங்கவல்லி தாசில்தாருக்கு, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். நேற்று, முதல் கட்டமாக, 10 பேரை அழைத்து, தாசில்தார் பேச்சு நடத்தினார். அவர்கள், 'வழக்கை திரும்ப பெறவேண்டும். வீடுகளின் பாதிப்புக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
தாசில்தார், 'வழக்கு திரும்ப பெறப்படும். நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய முடியாது. அடுத்த நிதியாண்டில் பராமரிப்புக்கு கூடுதல் நிதி வழங்குவதாக, ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பணி மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும்' என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. மற்றவர்களிடம், இன்று பேச்சு நடத்தப்படும் என, தாசில்தார் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X