'கபடதாரியை அடையாளம் காண்பீர்' சேலத்தில் பன்னீருக்கு எதிராக போஸ்டர்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
'கபடதாரியை அடையாளம் காண்பீர்' என குறிப்பிட்டு, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, சேலத்தில் வக்கீல் போஸ்டர் ஒட்டியுள்ளார்.அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்த நிலையில், பன்னீர்செல்வம், பழனிசாமியின் ஆதரவாளர்கள், எதிர் தரப்பை குற்றம்சாட்டி, 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர். சேலத்தில், தேசிய மக்கள் இயக்க நிறுவனரும், அ.தி.மு.க.,வின் ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான வக்கீல்


'கபடதாரியை அடையாளம் காண்பீர்' என குறிப்பிட்டு, பன்னீர்செல்வத்துக்கு எதிராக, சேலத்தில் வக்கீல் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்த நிலையில், பன்னீர்செல்வம், பழனிசாமியின் ஆதரவாளர்கள், எதிர் தரப்பை குற்றம்சாட்டி, 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர். சேலத்தில், தேசிய மக்கள் இயக்க நிறுவனரும், அ.தி.மு.க.,வின் ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான வக்கீல் மணிகண்டன், பன்னீர்செல்வத்தை கபடதாரி என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளார்.
பசும்பொன் தேவர், ஜெயலலிதா, பழனிசாமி படங்களுடன், பன்னீர்செல்வத்தின் படம் மீது கோடுகள் போட்டபடி ஒட்டியுள்ள போஸ்டரில், 'தேவர் இன சொந்தங்களை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தும் கபடதாரியை அடையாளம் காண்பீர். தெய்வீக தேவர் இன மக்கள் ஒரு போதும் இந்த கபடதாரியை நம்பமாட்டார்கள்' என குறிப்பிட்டுள்ளது. சேலம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X