செய்திகள் சில வரிகளில் . சேலம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்சேலம், ஜூலை 7-ஓமலுார், மாங்குப்பை, பழையூர் காலனியை சேர்ந்தவர் பாலசுந்தரம், 54. நேற்று மாலை, 5:10 மணிக்கு, டால்மியா போர்டு எதிரே ரயில்வே பணி நடக்கும் இடத்தில், டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது நிலை தடுமாறி, 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. பாலசுந்தரம் துாக்கி வீசப்பட்டார். கருப்பூர் போலீசார், சூரமங்கலம்

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்
அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்
சேலம், ஜூலை 7-
ஓமலுார், மாங்குப்பை, பழையூர் காலனியை சேர்ந்தவர் பாலசுந்தரம், 54. நேற்று மாலை, 5:10 மணிக்கு, டால்மியா போர்டு எதிரே ரயில்வே பணி நடக்கும் இடத்தில், டிராக்டரை ஓட்டிச்சென்றார். அப்போது நிலை தடுமாறி, 30 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.
பாலசுந்தரம் துாக்கி வீசப்பட்டார். கருப்பூர் போலீசார், சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், பள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுந்தரத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக, டிரைவர் உயிர் தப்பினார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அம்மன் கோவில் தேர் திருவிழா
தம்மம்பட்டி, ஜூலை 7-
தம்மம்பட்டி, நாகியம்பட்டியில் விநாயகர், கம்பபெருமாள், செல்லியம்மன், மாரியம்மன், பெரியசாமி கோவில்கள் உள்ளன. அங்கு, கடந்த ஜூன், 22ல், மாரியம்மனுக்கு பூ போடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து செல்லியம்மன், மாரியம்மன், பெரியசாமி, கம்பபெருமாள் சுவாமிகளுக்கு பொங்கல் வைபவம் நடந்தது.
நேற்று, மாரியம்மன் சுவாமிக்கு தேர் திருவிழா நடந்தது. 20 அடி உயர தேரில், மாரியம்மனை எழுந்தருள செய்து, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்துச்சென்றனர். திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
அரசு மருத்துவமனைக்கு
2,500 குளுக்கோஸ் பாட்டில்
சேலம், ஜூலை 7-
'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, 2,500 குளுக்கோஸ் பாட்டில்களை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி நிர்வாகிகள் வழங்கினர்.
சேலம் அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் தட்டுப்பாட்டால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, சேலம் ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி நிர்வாகி பொன்னுசாமி, 2,500 குளுக்கோஸ் பாட்டில்களை, இலவசமாக வழங்கினார். அந்த பாட்டில்களை, கேலக்ஸி தலைவர் உடையப்பன் உள்ளிட்டோர், டீன் வள்ளியிடம், நேற்று வழங்கினர்.

வீட்டில் நகை,
பணம் அபேஸ்
ஆத்துார், ஜூலை 7-
தெற்கு உடையார்பாளையத்தை சேர்ந்தவர் மோகன், 40. பழைய இரும்பு கடையில் பணிபுரிகிறார். நேற்று, வேலைக்கு சென்றுவிட்டு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 5 பவுன் நகை, 13 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. ஆத்துார் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X