செய்திகள் சில வரிகளில் கரூர்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
போர்வெல் குழாய்களைசீரமைக்க வேண்டும்கரூர், ஜூலை 7-கரூர் அருகே, மூக்கணாங்குறிச்சி, ஆராப்பட்டியில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஆனால், நாள்தோறும் குடிநீர் வழங்குவது இல்லை. இதனால், பொதுமக்கள் போர்வெல் குழாய்களை தேடி செல்லும் நிலை உள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால், போர்வெல் குழாய்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், ஆராப்பட்டியில்

போர்வெல் குழாய்களை
சீரமைக்க வேண்டும்
கரூர், ஜூலை 7-
கரூர் அருகே, மூக்கணாங்குறிச்சி, ஆராப்பட்டியில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஆனால், நாள்தோறும் குடிநீர் வழங்குவது இல்லை. இதனால், பொதுமக்கள் போர்வெல் குழாய்களை தேடி செல்லும் நிலை உள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால், போர்வெல் குழாய்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால், ஆராப்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, நாள்தோறும் குடிநீர் வழங்கவும், போர்வெல் குழாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சுகாதார கழிப்பிடம்
கட்டித்தர வேண்டும்
கரூர், ஜூலை 7-
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே, மல்லானுார் கிராமப்பகுதியாகும். அங்கு பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. குறிப்பாக பெண்கள், கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் அவதிப்படுகின்றனர். பெண்களுக்கு தரமான சுகாதார கழிப்பிடம் கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், கழிப்பிடம் கட்டித்தரப்படவில்லை. இதனால், மல்லானுார் பகுதி பொதுமக்கள், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக புதிதாக கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை குழி
மூடி போட்டு மூடப்படுமா?
கரூர், ஜூலை 7-
கரூர் அருகே, குளத்துப்பாளையம் சாலையில், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல இடங்களில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வட்டமாக குழி அமைக்கப்பட்டுள்ளது. இதை சில இடங்களில் மூடாமல் வைத்துள்ளனர். இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது.
அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகயர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால், பாதாள சாக்கடை குழிகளை, இரும்பு மூடியால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பைக் மீது லாரி மோதி
ஒருவர் படுகாயம்
குளித்தலை, ஜூலை 7-
குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., வரகூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம், 26. இவர் டூவீலரில் கடந்த, 4ம் தேதி மாலை, 4:30 மணியளவில், வரகூர்-அய்யர்மலை சாலையில், பூனை குட்டி மடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வம் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, லாலாப்பேட்டை போலீசார் லாரி டிரைவர், முசிறியை சேர்ந்த பாஸ்கர், 27, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தில்
6 பவுன் செயின் திருட்டு
குளித்தலை, ஜூலை 7-
குளித்தலை அடுத்த, கே.பேட்டை கிராமத்தில் உள்ள தேவேந்திர குல தெருவில், நேற்று காலை, 10:00 மணியளவில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, அதே ஊரைச் சேர்ந்த செல்வி, 60, என்பவர், கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அதேபோல், கும்பாபிஷேக விழாவுக்கு வந்த, மருதுார் டவுன் பஞ்., கூடலுார் கிராமத்தை சேர்ந்த பேபி,60, என்பவர், தன் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, செல்வி, பேபி ஆகியோர் லாலாப்பேட்டை போலீசில் அளித்த புகார்படி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி மாயம்
போலீசில் புகார்
குளித்தலை, ஜூலை 7-
குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 15 வயது மகள். இவர் ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றார். ஆனால், மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

லாட்டரி சீட்டு விற்ற
ஐந்து பேர் கைது
கரூர், ஜூலை 7-
கரூர் மாவட்டத்தில், லாட்டரி விற்றதாக, ஐந்து பேரை கைது செய்தனர்.
கரூர் டவுன், லாலாப்பேட்டை, தோகைமலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ஜோதி, எஸ்.ஐ.,க்கள் நாகராஜன், திருப்பதி, தங்கவேல் உள்ளிட்ட போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லாட்டரி சீட்டுகளை விற்றதாக மருதமுத்து, 59, நடராஜன், 55, பாஸ்கர், 48, ராஜரத்தினம், 62, அப்பாஸ், 30, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X