அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், குறைக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், போதிய அளவில் மழை பெய்யாததால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 833 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி


அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், குறைக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது.
கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில், போதிய அளவில் மழை பெய்யாததால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு
குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 833 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 138 கனஅடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது.
இதனால், ஆற்றில், 200 கனஅடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 65.59 அடியாக இருந்தது.
அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. இதனால், தடுப்பணை பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளன.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 11 ஆயிரத்து, 336 கனஅடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 10 ஆயிரத்து, 816 கனஅடியும், தென்கரை வாய்க்காலில், 400 கனஅடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 34.31 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 6.56 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X