பில்லூர் பஞ்சாயத்தில் 20 ஆண்டுக்கு பின் சமூக ஒற்றுமையின் மீன் பிடி திருவிழா

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
குளித்தலை அடுத்த, பில்லுார் பஞ்., பில்லுாரில், 120 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. பருவமழையின் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், இக்குளத்தில் தேங்குகிறது. தேங்கி நிற்கும் மழைநீரானது, மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இதேபோல்,



குளித்தலை அடுத்த, பில்லுார் பஞ்., பில்லுாரில், 120 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது.
பருவமழையின் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் மழைநீர், இக்குளத்தில் தேங்குகிறது. தேங்கி நிற்கும் மழைநீரானது, மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இதேபோல், மழைகாலங்களில் மழைநீரோடு, பல்வேறு
வகையான மீன்கள் கோவில் குளத்துக்கு வருவதுண்டு.
கடந்த, 20 ஆண்டாக போதிய மழை இல்லாமல், மீன்களின்றி காணப்பட்டது. கடந்தாண்டு அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரி, குளங்கள், தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பி வழிந்தன. இதையடுத்து, பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு பல்வேறு வகையான மீன்கள் வரத்தொடங்கின. தற்போது கோடைகாலம் தொடங்கியதால், இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க, 8 பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், 20 ஆண்டுக்கு பின் நேற்று, சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X