பயனற்ற பொது கழிப்பிடம் பொதுமக்கள் அவஸ்தை

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன்ப, பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.அந்த கழிப்பிடம் சில



கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, ஆண்டாங்கோவில் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன்ப, பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. பஞ்சாயத்து நிர்வாகம் சரி
செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், ஆண்டாங்கோவில் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X