அரவக்குறிச்சி டவுன் பஞ்.,ல் பிளாஸ்டிக் ஒழிப்பு கூட்டம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
அரவக்குறிச்சி டவுன் பஞ்.,ல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம், செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை மத்திய, மாநில அரசுகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பொருட்கள், தங்கு தடையின்றி இதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதுகுறித்து


அரவக்குறிச்சி டவுன் பஞ்.,ல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம், செயல் அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை மத்திய, மாநில அரசுகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பொருட்கள், தங்கு தடையின்றி இதுவரை பயன்பாட்டில் இருந்து
வருகிறது.
இதுகுறித்து நடந்து கலந்தாய்வு கூட்டத்தில், அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் தியேட்டர், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஓட்டல், டீக்கடை, பேன்ஸி ஸ்டோர், ஜவுளிக்கடை, மருந்து கடைகள், கறிக்கடைக்காரர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டனர். அவர்களிடையே இவற்றின் பயன்பாடுகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அரசு விதித்துள்ள தடை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
டவுன் பஞ்., தலைவர் ஜெயந்தி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X