செய்திகள் சில வரிகளில் நாமக்கல்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
கல்லுாரி மாணவி மாயம்எருமப்பட்டி, ஜூலை 7-எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி, 32. இவரது, 19 வயது மகள், கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். கடந்த, 5ம் தேதி, நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் பல இடங்களில் தேடியும்


கல்லுாரி மாணவி மாயம்
எருமப்பட்டி, ஜூலை 7-
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி, 32. இவரது, 19 வயது மகள், கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். கடந்த, 5ம் தேதி, நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.
நினைவு தினம் அனுசரிப்பு
ராசிபுரம், ஜூலை 7-
தமிழ்நாடு மாநில கூட்டுறவு நிலவளவங்கி, ராசிபுரம் முன்னாள் தலைவர், தி.மு.க., தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினரும், தற்போதைய கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளருமான, எம்.பி., ராஜேஷ்குமார் தாத்தா ராமசாமியின், 21ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து ராசிபுரம் நிலவள வங்கியில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, ராஜேஷ்குமார் மற்றும் நகர செயலாளர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் அன்பழகன், ஒன்றிய தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயி மாயம்: தாய் புகார்
பள்ளிபாளையம், ஜூலை 7-
பள்ளிபாளையம் அருகே இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் உமா. இவரது மகன் லோக மகேஷ்வரன் 29, விவசாயி. இவர் கடந்த மாதம், 29ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து உமா மொளசி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, லோக மகேஷ்வரை தேடி வருகின்றனர்.
மனைவி பிரிந்த ஏக்கம்
கணவன் தற்கொலை
பள்ளிபாளையம், ஜூலை 7-
பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி சிவராஜ், 36. இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில ஆண்டுகளாக பிரிந்து உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சிவராஜ், கடந்த, ஒன்றாம் தேதி விஷம் குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் மோதி
மூதாட்டி பலி
பள்ளிபாளையம், ஜூலை 7-
பள்ளிபாளையம் அருகே அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 85. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, ஆயக்காட்டூர் பகுதியில் ரயில்பாதையை கவன குறைவாக கடந்தபோது, ரயில் மோதி இறந்து விட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். என்.சி.சி., மாணவர்கள் தேர்வு
குமாரபாளையம், ஜூலை 7--
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., மாணவர்கள் தேர்வு, உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமையில் நடந்தது. ராணுவ சுபேதார் மேஜர் செந்தில்குமார், கம்பெனி ஹவில்தார் மேஜர் அப்துல்காதர் பங்கேற்று, 32 மாணவர்களை தேர்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார். இதில் மாணவர்களுக்கு ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், தடகள போட்டி, ரிலே உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X