சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை: ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு

Updated : ஜூலை 07, 2022 | Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வாரிசுகள் இடையே பிரச்னை எழுந்துள்ளது. ராம்குமார், பிரபு ஆகியோர் மீது சென்னை சிவில் கோர்ட்டில் இவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.தமிழ் சினிமாவில் நடிப்புக்கே திலகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2001ம் ஆண்டு 72வது வயதில்
Sivajiganesan, Ramkumar, Prabhu,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வாரிசுகள் இடையே பிரச்னை எழுந்துள்ளது. ராம்குமார், பிரபு ஆகியோர் மீது சென்னை சிவில் கோர்ட்டில் இவர்களது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிப்புக்கே திலகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2001ம் ஆண்டு 72வது வயதில் மறைந்தார். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். ராம்குமார், தயாரிப்பு பணியிலும், சில படங்களிலும் நடித்துள்ளார். பிரபு, சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.


latest tamil news

சிவாஜிக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவரது மறைவுக்கு பின் மகன்கள் ராம்குமார், பிரபு அதை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை சகோதரர்கள் ராம்குமார், பிரபு விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்கள் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் தனது தந்தை உயில் எழுதி வைக்காத நிலையில் பிரபு, ராம்குமார் அவர்களாகவே ஒரு உயில் தயாரித்து தங்களை ஏமாற்றிவிட்டனர்.


latest tamil news
தங்கள் தாய்வழி சொத்துக்களின் தங்களுக்கு பங்கு தரவில்லை. தந்தை சேர்த்து வைத்திருந்த பல கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி பொருட்களையும் தராமல் ஏமாற்றிவிட்டனர். எங்கள் தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு உரிய வகையில் பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
11-ஜூலை-202219:03:32 IST Report Abuse
sankar சிவாஜி குடும்பம் இப்படி சிதறுவதப் பார்த்து மனம் வருந்துகிறது.
Rate this:
Cancel
Deen - pattukkottai,இந்தியா
08-ஜூலை-202209:50:27 IST Report Abuse
Deen yenga Annan prabu nermayanavar appadiyellam saiyamattar avar mugatha pathale theriyume ..
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
08-ஜூலை-202200:32:16 IST Report Abuse
அன்பு என்று ஒரு பெண் தனக்கான வழித்துணையை தானே தேடி கொள்கிறாளோ, அன்று தான் இந்த சமுதாய பிரச்சனை ஒழியும். மேலை நாடுகளில் சரிசமமாக சொத்துக்கள் பிரிக்கப்படுகின்றன. ஆண்பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை. காரணம் பெண்ணிற்கான திருமண செலவை, சகோதரனோ அல்லது அந்த குடும்பமோ பார்ப்பதில்லை. அதே பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்கிறார்கள். அதுவரை சாதி, வரதட்சணை, மற்றும் சொத்து பிரச்சனைகள் தொடரும். விவகாரத்து, சிகரட், மது மற்றும் கஞ்சா குடிப்பதற்கு பெண் உரிமை, கணவனை கண்டபடி திட்டுவது, சமைக்காமல் எப்போதும் வெளியில் சாப்பிடுவது என்று எல்லாவற்றையும் நாம் மேலைநாடுகளில் இருந்து பின்பற்ற தேவை இல்லை. ஆனால் சில நல்லவற்றை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் தனக்கான புருஷனை தேர்ந்தெடுத்து கொள்ள தகுதி படைத்தவள் அல்ல என்று மற்றவர்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X