இரட்டை இலையை முடக்க கோரிய மனு தள்ளுபடி

Added : ஜூலை 07, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: இரட்டை இலையை முடக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக முன்னாள் உறுப்பினரான பிஏ ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் , பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையிலான பிரச்னை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு மீது
இரட்டை இலையை முடக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: இரட்டை இலையை முடக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக முன்னாள் உறுப்பினரான பிஏ ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் , பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையிலான பிரச்னை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் உள்ளதால், இரட்டை இலையை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி மற்றும் மாலா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை தொடர நீங்கள் யார்? என்ன அடிப்படை உரிமை உள்ளது. தேவையற்ற விளம்பரமாக உள்ளதாக கூறி ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
07-ஜூலை-202213:44:42 IST Report Abuse
சீனி அரசியல் சசனம், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள வெளினாட்டு சக்திகள் பெருகிவிட்டது, அதன் சாட்சி தான் இந்த ஜோசப். இவர் யார், இவரை பணம் கொடுத்து இயக்குபவர்கள் யார் என உண்மை வெளிவர வாய்ப்பில்லை. எனவே அந்தந்த கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினராக 10 வருடம் தொடர்ந்து இல்லாமல், அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்க பொது நல வழக்கு என்று கோர்ட்டை நாடுபவர்களுக்கு குறைந்தது 5லட்சம் அபராதம் விதிக்கவேண்டும். அதிமுக மட்டுமள்ள, திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும், ஜனநாயகத்துக்கும் இந்த ஜோசப்கள் என்றும் ஆபத்து தான், வீண் வழக்கு போட்ட இவரை கோர்ட் 1 வருசம் சிறையில் அடைத்திருக்கவேண்டும்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
07-ஜூலை-202212:37:39 IST Report Abuse
raja இப்படித்தான் இருக்கனும் தீர்ப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X