பகவதியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
நாமக்கல் அருகே ஜங்கமநாய்க்கன்பட்டி பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.நாமக்கல் அருகே உள்ள வில்லிபாளையம் பஞ்., ஜங்கமநாய்க்கன்பட்டியில், சித்தி விநாயகர், பகவதி அம்மன் கோவில்கள், மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, 5ம் தேதி காலை கணபதி ஹோமம் நடந்தது. காவிரி தீர்த்தம் புறப்பட்டும் நிகழ்ச்சியும், மாலையில் விநாயகர்


நாமக்கல் அருகே ஜங்கமநாய்க்கன்பட்டி பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
நாமக்கல் அருகே உள்ள வில்லிபாளையம் பஞ்., ஜங்கமநாய்க்கன்பட்டியில், சித்தி விநாயகர், பகவதி அம்மன் கோவில்கள், மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, 5ம் தேதி காலை கணபதி ஹோமம் நடந்தது.
காவிரி தீர்த்தம் புறப்பட்டும் நிகழ்ச்சியும், மாலையில் விநாயகர் வழிபாடும், எஜமானர் சங்கல்பம், புண்யாகம், காப்பு கட்டுதல் மற்றும் வாஸ்து பூஜையும் நடந்தது. பின் முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு கோபுர கலசம் வைத்தல், நவரத்தின கற்கள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், நேற்று அதிகாலை, 5 மணிக்கு, 2ம் கால யாக வேள்வியும், நவதானியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள் ஹோமம்
நடந்தது.
பின், விநாயகர், பகவதியம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X