அரசு பள்ளிக்கு மீண்டும் பஸ் இயக்கம் காலைக்கதிருக்கு மாணவர்கள் நன்றி

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
எருமப்பட்டி அருகே உள்ள பழையபாளையத்தில் அரசு மேல்நி‍லைப்பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் வசதிக்காக, நாமக்கல்லில் இருந்து, காலை, மாலை நேரங்களில், பழையபாளையம் அரசு பள்ளி வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், இந்த அரசு டவுன் பஸ், பள்ளி வழியாக செல்வது நிறுத்தப்பட்டது.


எருமப்பட்டி அருகே உள்ள பழையபாளையத்தில் அரசு மேல்நி‍லைப்பள்ளியில், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் வசதிக்காக, நாமக்கல்லில் இருந்து, காலை, மாலை நேரங்களில், பழையபாளையம் அரசு பள்ளி வழியாக டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், இந்த அரசு டவுன் பஸ், பள்ளி வழியாக செல்வது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் அரசு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டும், அரசு பள்ளிக்கு பஸ் வந்து செல்லாததால், மாணவர்கள், ஒரு கிலோ மீட்டர் துாரம் நடந்து ‍சென்றனர். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கொரோனா தொற்று காலங்களில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும், மாணவர்களின் வசதிக்காக இயக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கடந்த, 3 நாட்களாக பழையபாளையம் அரசு பள்ளி வழியாக, அரசு பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பிள்ளை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு இனிப்பு வழங்கி வரவேற்றதுடன், இதற்கு காரணமான காலைக்கதிர் நாளிதழுக்கு நன்றி
தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X